தடக்கையினாலே தான் விரும்பின (1) பிடியை அருள்செய்யும் மயக்கத்தை 1யுடைய யானைபோல (2) மெய்ம்முழுதினையுந் தடவுதலையுஞ் செய்தான் ; அச்செயலாலே யான் கைப்பட்டுக் கலங்கிய வருத்தத்தைத் தோழி போக்கினேன் ; இனித், தோழீ! நீயும் யான் விரும்பிய விருப்பத்தின் மனம்புரிந்து நின்மகள் நங்குடிக்கு வடுவாகாமற் (3)கற்புக்கடம்பூண்டாளென்று நம்முடைய மனைக்கண் நிகழ்கின்ற அரிய மணம் (4) அவனைவிட்டு நீங்காமல் யாய்க்கு அறத்தொடுநிலை வகையாற் கூறின் அது நமக்கு நல்லதொன்றென்று கருதி நின்னோடு 2உசாவுவேன் ; நீ இங்ஙனங் கூறின் நிலைநில்லாத உலகத்திலே நிலைநிற்பதோர் புகழ் நமக்குப் 3பொருந்தும்; எ - று. (5)இது தலைவி கைப்பட்டுக்கலங்கிப் புணர்ச்சிநிகழ்ந்தமை தோழிக்குக் கூறினாள். அவள் அறத்தொடுநிற்றல்கருதி. 4இஃது (6) உண்மைசெப்பலென்னும் அறத்தொடுநிலையாம்.
(உ) “நிழறுழாம் யானை” (ஊ) “மடிக்கினு மண்ணுறுகையது” (எ) “ஏழுறுப்புந் திண்ணிலந்தோய்வ” என்று வருபவற்றின் பொருள்கருதி, தொய்யலென்பதற்கு நிலந்தோய்தலென்று பொருள்கொள்ளலுமாம். 1. இந்நூற்பக்கம் 74 : 1-ஆம் குறிப்புப் பார்க்க. 2. மடப்பிடி.............கழைதின் யாக்கை விழைகளிறு தைவர” அகம். 328 : 11 - 3. 3. (அ) “கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு, நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித், தன்றுயர் காணாத் தகைசால் பூங்கொடி, யின்றுணை மகளிர்க்கின்றி யமையாக், கற்புக்கடம் பூண்ட வித்தெய்வ மல்லது, பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்” (ஆ) “கற்புக் கடம்பூண்டு, காதலன் பின்போந்த, பொற்றொடிநங்கைக்குத் தோழிநான்கண்டீர்” சிலப். 15 : 139 - 144, 29 ; ‘தற்பயந்தாள்’ (இ) “கற்புக்கடன் பூண்டு நுங்கடன் முடித்த” மணி. 26 ; 8. (ஈ) “பொற்றொடிப் பணைத்தோண் முற்றிழை மாதரை, யிற்பெருங்கிழமையொடு கற்புக்கடம் பூட்ட, வரையும் வாயி றெரியுஞ் சூழ்ச்சியுள்” பெருங். (3) 21; 6 - 8. 4. (அ) “அயன்மண மொழியரு ளவர்மண மெனவே” ‘கயிலைநன்’ (ஆ) “பெறுகநன் மணம்விடு பிழைமண மெனவே” ‘குறமக’ சிலப். 24. 5. (அ) இச்செய்யுளைக் கைப்பட்டுக் கலங்கியதற்கு மேற்கோள் காட்டி ‘இதனுட்கைப்பட்டுக் கலங்கிய வாறும், அருமறை யுயிர்த்த வாறும், இவ்வாறு செய்யாக் கால்இறந்து படுவனென்னுங் குறிப்பினனாய் ‘மன்னா, வுலகத்து.........................புரையும்’ எனக் கூறியவாறுங் காண்க. என்பர் இளம் பூரணர். (ஆ) நச்சினார்க்கினியரும் இதற்கு இச்செய்யுளை மேற்கோள் காட்டுவர். தொல். கள. சூ. 20. 6. “எளித்த லேத்தல் வேட்கையுரைத்தல், கூறுத லுசாத லேதீடு (பிரதிபேதம்)1உடையவானை, 2உசாவு வேனீங்ஙனங் கூறினால், 3பொருந்து மெனத்தலைவி கைப்பட்டுக்கலங்கிய 4இது.
|