(1) இது கைப்பட்டுக்கலங்கிய வருத்தத்தைக் களைந்தேனென உரையெனத் தோழிக்கு உரைத்தற்கண்தலைவி 1கூறியது. அது நொதுமலர்வரைவிற்கு மணமுரசு இயம்பியவழி ஆண்டானும் 2பிறவாண்டானுந் தோழிக்கு இன்னவாறு கூட்டம் நிகழ்ந்ததெனக்கூறி, அதனை 3நமர் அறியக் கூறல் வேண்டுமென்றும் தலைவற்கு நம்வருத்தம் அறியக் கூறல்வேண்டுமென்றும் தலைவி 4கூறுதற்கண் நிகழ்வது. இதன் பொருள். கொடியி லுள்ளனவும் கோட்டி லுள்ளனவு மாகியபூவாக நீரின்றா யிருக்க நிறம்பெறும்படி பொடியினையுடைய நெருப்பாற்பண்ணப்பட்ட பொற் பூவாற்செய்த கோதையினையும் தொடிசெறிந்த (2) கட்டுவடங்கள் அமைந்த அழகினையுடைய முன்கையினையும் அணைபோலும் மெல்லிய 5தோளையுமுடையாய் ! நின் அடியிலே யான் உரைதற்கு நீ அருளாதிருத்தல் நினக்குப் பொருந்தினதொன்றோவென்று கூறிப் பொன்னாற்செய்த மகரவாயாகச் சமைந்த தலைக்கோலம் விழுங்கிக் கிடந்த 6நரந்தம்பூ நாறுங் கரியகூந்தலின் முடியை ஒழியாமல் மிகப்பிடித்து அதிலே நன்மைபெறும்படி கட்டின பற்றமைந்த ஒருமாலையை விரலாலே முறையாகச்சுற்றி அதனை மோந்துபார்த்தலை யுஞ் செய்தான் ; அதுவே 7யன்றி நறவம்பூ அலர்ந்தாற் போன்ற என்னுடைய மெல்லிய விரலையுடைய கையைத் தாங்கிக்கொண்டு அருளையுடைய தன் சிவந்த கண் மறையும்படி வைத்துக் கொல்லன் உலைமூக்கு வெவ்விதாய் உயிர்க்குமாறுபோல உயிர்த்தலையுஞ் செய்தான்; அதுவேயன்றித் தொய்யில் எழுதின இளையமுலையை இனியவாகத் தடவி (3) அத்தொய்யிலைக் கொண்டுவந்த
1. “உரை யெனத்தோழிக் குரைத்தற்கண்” என்பதன் உரையில் இச்செய்யுளை மேற்கோள் காட்டிக் கைப்பட்டுக் கலங்கிப் புணர்ச்சி நிகழ்ந்தமை கூறி அருங்கடி நீவாமைகூறின் நன்றெனத்தமர்க்குக் கூறுமாறு தோழிக்குத் தலைவி கூறினாள். சுரிதகத்து இருகால் தோழி யென்றாள் நாணுத்தளையாக மறைகரந்தவாறு தீரத் தோழிக்கு முகமனாக என்பர் நச்சினார்க்கினியர் ; தொல். கள. சூ. 21. 2. “கட்டுவடவிணை” பெருங், (2) 19 : 181. 3. (அ) “நயன வாரியின், றொய்யல்வெஞ் சுழியிடைச் சுழிக்குமேனியள்” எனத் தொய்யலென்பது வெள்ளமென்னும் பொருளில் வருதலாலும் (ஆ) “மையலுற் றிழிமத மழைய றாமையாற் றொய்யலைக் கடந்தில சூழி யானையே” (இ) “சூழி யானை மதம்படு தொய்யலின்” என யானை மத்ததையொட்டி அதன் பெருக்கிற்கு வருதலாலும், ‘தொய்யலர் தடக்கை’ என்பதனை மத நீரினையுடைய அழகிய வளைந்த கையென யானைக்கு ஆக்குதலுமாம். (ஈ) “தாழ்பெருந் தடக்கை..................யானை” (பிரதிபேதம்)1கூறியது என்றது நொதுமலர், 2பிறாண்டானும் தோழிக்கன்னவாறு, 3நாமறிய, 4தலைவிகூறுதற் கண்ணுமென்றவாறு. 5தோளினையுமுடையாய், 6நாரத்தம்பூ, 7அன்றிகாம்பூவலர்ந்தாற்.
|