பக்கம் எண் :

326கலித்தொகை

(1)அதனால்;

(2)அல்லல் களைந்தனன் றோழி நந்நக
ரருங்கடி நீவாமை 1கூறி னன்றென
நின்னொடு சூழ்வ றோழி நயம்புரிந்
தின்னது செய்தா ளிவளென
(3)மன்னா வுலகத்து 2 மன்னுவது 3புரைமே


(இ) "மையல்யானை" புறம். 261: 7. சீவக, 2365, பெருங். (1) 43: 81. (ஈ) "மையன் மதயானை" சீவக. 589.
(உ) "மையன்மாக்கரி" கந்த. துணைவர்வரு. 32. (ஊ) "மையன்மத வெங்களியானை" நைடத. அன்னத்தைத்தூது. 128.

1. "அதனால், அல்லல் களைந்தனன் றோழி" என்பது கைப்பட்டுக் கலங்கிய வருத்தத்தைக் களைந்தனனெனத் தலைவி உரையெனத் தோழிக்கு உரைத்தற்கு மேற்கோள்: தொல், கள. சூ. 21. நச்.

2. “துணைச்சுட்டுக்கிளவி கிழவியதாகும்” என்புழி, செவிலிக்கு உரைப்பாயாக வென்று தோழிக்குக் தலைவிகூறியதற்கு இச்சுரிதகம் மேற்கோள். தொல். கள. சூ. 32. நச்.

3. (அ) ”மன்னா வுலகத்து மன்னுவது புரைமே” என்பது மன்னென்னு மிடைச்சொல் நிலைபேற்றின்கண் வந்தமைக்கு மேற்கோள். (நன். இடைச். சூ. 13. மயிலை. வி. இரா) (ஆ) “நில்லா வுலகத்து நிலைமை தூக்கி” (இ) “தொலையாநல்லிசை யுலகமொடுநிற்ப” (ஈ) “கெடாஅ நல்லிசை நிலைஇ” (உ) “நல்லிசை நிலைஇய நனந்தலை யுலகத்து” (ஊ) “மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத்தா மாய்ந்தனரே” (எ) “ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்ப தொன்றில்” (ஏ) “மண்ணியன் ஞாலத்து மன்னு புகழ்வேண்டி” (ஐ) “நிலையிலாவுலகி னின்றவண்புகழை” (ஒ) “ஒருவனதிரண்டி யாக்கை யூன்பயி னரம்பின்யாத்த, வுருவமும் புகழுமென்றாங் கவற்றி னூழ்காத்துவந்து, மருவிய வுருவமிங்கே மறைந்துபோமற்ற யாக்கை, திருவமர்ந் துலகமேத்தச் சிறந்து பின்னிற்குமன்றே” (ஓ) “என்று நிற்கு மிரும்புகழ்” (ஒள) “நின்ற புகழொழிய நில்லா வுயிரோம்பி, யின்றுநாம் வைக லிழிவாகும்” (ஃ) “இன்றுளார் நாளை மாள்வர் புகழுக்கு மிறுதியுண்டோ” (அஅ) “மன்னா வுலகத்து மன்னிய சீர்த்தஞ்சை வாணன்” (ஆஆ)“சாதல்வந் தடுத்த காலுந் தனக்கொரு சாதலின்றிப், பூதல மிருக்குங்காறும் புகழுடம்பிருக்கும்”

(பிரதிபேதம்)1கூறினன் நின்னொடுஞ், 2மன்னியது, 3புரைமோ புரிமே புரிமோ. புகழே.