பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி325

பொலம்புனை (1) மகரவாய் நுங்கிய சிகழிகை
நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ்
1விரன்முறை சுற்றி(2) மோக்கலு மோந்தன
(3)னறாஅ வவிழ்ந் தன்னவென் மெல் விரற்போது கொண்டு

10 (4)செறாஅச் செங்கண் புதைய வைத்துப்
(5)பறாஅக் குருகி னுயிர்த்தலு முயிர்த்தனன்
றொய்யி லிளமுலை 2யினிய தைவந்து
தொய்யலந் தடக்கையின் (6) வீழ் 3பிடி யளிக்கு
(7)மையல் யானையின் மருட்டலு மருட்டினன்;


சுரும்பிமிர்தாதொடு தலைத்தலை மிகூஉ, நரந்தநறுமலர் நன்களிக்கும்மே” பரி. 16 : 14 - 5. என்புழி நரந்தநறுமல ரென்பதற்கு நரந்தம்போலும் நறியமலர் என்று பரிமேல் எழுதியிருத்தலும் இங்கே அறிதற்பாலன.

1. (அ) “மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்துத், துவரமுடித்த துகளறு முச்சி” முருகு. 25 - 6. (ஆ) “சுறவுவாயமைத்த சுரும்புசூழ்சுடர்நுதல்” பெரும்பாண். 385. (இ) “எறி மகர வலய மணிதிகழ் நுதலியர்” பரி. 10. 77. (ஈ) “எறிகதிர் மகரவாய் பொறித்த, திலதமேலிடத்துச் செங்கதிர் தொடர்ந்த சேயொளி யரவென நாற்றி” திருவானைக்காப். அகிலாண்டநாயகி. 29.

2. “மோக்கலு மோந்தனன்” “உயிர்த்தலு முயிர்த்தனன்” “மருட்டலு மருட்டினன்” என்பவற்றொடு, “உண்ணலு முண்ணேன் வாழலும் வாழேன்” (கலி. .23 : 8.) என்பதும் அதன் குறிப்பும் ஒப்புநோக்கற்பாலன.

3. “நறாவிதழ் கண்டன்ன செவ்விரற் கேற்ப” கலி 84 : 22.

4. “செறாஅச் செங்கண்” பரி. 13 : 57.

5. (அ) “ஊதுலைக் குருகி னுள்ளுயிர்த்தசைஇ” அகம். 55: 7. (ஆ) “காதலர்ப் பிரிந்த மாதர் நோதக, வூதுலைக் குருகி னுயிர்த்தனர்” (இ) “காதலிதன்னொடு கானகம் போந்ததற், கூதுலைக் குருகினுயிர்த்தனன் கலங்கி” (ஈ) “காதலற் கெடுத்த நோயோ டுளங்கனன், றூதுலைக் குருகி னுயிர்த்தனள்” சிலப். 4 : 58 - 9, 13 : 44 - 5. 22 : 151 - 2. (உ) “ஊதுலைக் குருகி னுயிர்த்து” (ஊ) “பறாஅக் குருகி னுயிர்த்தவன் போயபின்” மணி. 2: 43. 19: 28. (எ) “அதட்டுருத்தியி னுயிர்ப்பேற” கம்ப. ஊர்தேடு 210; (ஏ) “சிவையின்வா யென்னச் செந்தீயுயிர்ப்புறச் சிவந்தமூக்கன்” கம்ப. கும்பகருணவதை : 14.

6. வீழ்பிடி இந்நூற்பக்கம் 236 : 1-ஆம் குறிப்புப்பார்க்க.

7. (அ) “மையல்வேழம்” குறிஞ்சி. 165, பெருங். (2) 9; 69: கந்த. திருக்கல்யாண. 28, (ஆ) “யானை, மையலங் கடாஅஞ் செருக்கி” அகம். 307: 7 - 8.

(பிரதிபேதம்)1தொன்முறை, 2இனிது, 3பிடிக்களிக்கு.