பக்கம் எண் :

324கலித்தொகை

எ - து: 1கொடாதநோயாலே வருந்தி அமையாத 2என்றோழி மலையிடத்து முளிதலுறும்படி வருந்திய முளைத்தல் மிக்க சிறியதினை மழையைப் பெற அழகுபெற்றாற்போல இவள் ஆய்நுதற் 3கவின் நின்னளியைப்பெற அழகுபெறும்;
எ - று.

இட்டுப்பிரிவிரங்கலையும் அருமைசெய்தயர்த்தலையும் பின்பு நூல்செய்தோர் (1) ஒருவழித் தணத்தலென்று பெயர்கூறியவாறு காண்க.

இதனால், தலைவற்கு அசைவு பிறந்தது.

இது தரவும் தாழிசையும் தனிச்சொல்லும் சுரிதகமும்பெற்ற ஒத்தாழிசைக்கலி. (17)

(54)4கொடியவுங் கோட்டவு நீரின்றி நிறம்பெறப்
பொடி(3)யழற் புறந்தந்த பூவாப்பூம் பொலன்தோதைத்
தொடிசெறி யாப்பமை யரிமுன்கை (4) யனைத்தோளா
(5)யடியுறை யருளாமை யொத்ததோ நினக்கென்ன
5 (6)நரந்தநா றிருங்கூந்த லெஞ்சாது நனிபற்றிப்


1. ஒருவழித் தணத்தலென்னும் பெயர் நாற்கவி. சூ. 39. முதலியவற்றிற் காணப்படுகின்றது.

2. (ஆ) “கோட்டவுங் கொடியவும் பூப்பல பழுனி” ஐங். 414. (ஆ) “கொடியவு மிளந்தளிர் குழைத்த கோட்டவுங், கடிமலர் குடைவன” பிரமோத். பிரதோஷபூசை. 25. (இ) “கொடியவுங் கோட்டவும் பல்லவந் தீண்டில்” தணிகை. களவு. 308.

3. (ஆ) “அரியகைந் தன்ன வேடி றாமரை” பொருந. 159 (ஆ) “ஒள்ளழற் புரிந்த தாமரை” (இ) “அழல் புரிந்தவடர்தாமரை, யைதடர்ந்த நூற்பெய்து, புனைவினைப் பொலிந்த பொலனறுந் தெரியல்” (ஈ) “கேணி பூவா, வெரிமரு டாமரைப் பெருமலர் தயங்க” புறம். 11 : 16, 29 : 1 - 3, 364 : 2 - 3.

4. (அ) அணைத்தோளென்பது பயவுவமைக்கு மேற்கோள். (தொல். உவம. சூ. 1. பே) (ஆ) “அணைத்தோளாய்” கலி. 87 : 9. (இ) “அணைமென்றோள்” (கலி. 66 : 9.) என்பதும் அதன்குறிப்பும் பார்க்க.

5. (அ) “ஆந்தை யடியுறை யெனினே” (ஆ) “அடிநிழற் பழகிய வடியுறை” புறம். 67 : 12, 168 : 26. (இ) “காவலற் குறுகி யடியுறை யருண்மொழி யான்பணிந் துரைப்ப” பெருங். (1) 47 : 7 - 8.

6. (அ) “நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்” குறுந். 52. (ஆ) “நரந்த வார்குழல்” பிரமோத். உருத்திராக்க. 47. என்பவையும் (இ) “காவே.

(பிரதிபேதம்)1என்றியான் கூறும்படியாகக் கெடாத, 2என்றோழிநின்மலை, 3கவினானாநின், கவின் நின்றலையளியைப்பெற வழகுபெறுமென வரைவுகடாவினாள்.