பக்கம் எண் :

330கலித்தொகை

16 அனையன பலபா ராட்டிப் பையென
வலைவர் போலச் சோர்பத னொற்றிப்
நெஞ்சு நெகிழ்ந்த செவ்வி காணூஉப்
புலையர் போலப் புன்க ணோக்கித்
தொழலுந் தொழுதான் றொடலுந் தொட்டான்
காழ்வரை நில்லாக் கடுங்களி றன்னோன்
றொழூஉந் தொடூஉமவன் றன்மை
யேழைத் தன்மையோ வில்லை தோழி.

இது "பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி, யொருமைக் கேண்மையி னுறுகுறை தெளிந்தோ, ளருமை சான்ற நாலிரண்டு வகையிற், பெருமை சான்ற வியல்பின்கண்" (1) தலைவி கூறியது. என்றது,"ஒருமைக் கேண்மையின் உறுகுறை-தான் அவளென்னும் (2) வேற்றுமையில்லாத நட்பினாலே தோழி தனக்கு வந்து கூறிய குறையை, பொறியின் யாத்த புணர்ச்சிநோக்கித் தெளிந்தோள் - முன்னர்த் தெய்வப்புணர்ச்சி நிகழ்ந்தமைநோக்கி அதுகாரணத்தான் முடிப்பதாகத்தெளிந்த தலைவி, அருமை சான்ற நாலிரண்டுவகையில் - தான் 1முன் அருமையமைந்து நின்றநிலையாற் றலைவன்கண் நிகழ்த்திய மெய்தொட்டுப்பயிறன்முதலிய எட்டினாலே, பெருமைசான்ற இயல்பின்கண்ணும்-தனக்கு உளதாம் பெருமைகூறுதற்கு அமைந்ததோர் இயல்பின் கண்ணும். எ - று: "இதனாற் போந்த பொருள் தலைவன் இத்துணை இளிவந்தன செய்யவும் யான் நாணும் மடனும் நீங்கிற்றிலேனென்று தன்பெருமை தோழிக்குக் கூறதலாயிற்று.

இதன்பொருள்.

(3)மின்னொளி ரவிரற லிடைபோழும் பெயலேபோற்
பொன் 2னகை தகைவகிர் வகைநெறி வயங்கிட்டுப்
3போழிடை யிட்ட கமழ்நறும் பூங்கோதை

1. தொல். கள. சூ. 20. இந்நூற்பக்கம் 333 : 3-ஆம் குறிப்புப் பார்க்க.

2. "வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்" நாலடி. 75.

3. (அ) "மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை யாயத்துத், தன்னிறங் கரந்த வண்டுபடு துப்பி, னொடுங்கீ ரோதி" பதிற். 81 : 26-8. (ஆ) "எஃகிடை தொட்டகார்க் கவின்பெற்ற வைம்பால்போன், மையற விளங்கிய துவர்மண லதுவது, வைதாக நெறித்தன்ன வறலவிர் நிளைம்பா, லணிநகை யிடையிட்ட வீகையங் கண்ணி" கலி. 32 : 1 - 4. (இ) "திருந்து நானக்குழல்..............வரும் பொன்மாலை" (ஈ) "பொன்னரிமாலை பூண்டு" (உ) "பண்ணுரை மகளிர் மாலை பைந்துகில் கவர்ந்து கொள்ளக், கண்ணுரை மகளிர் சோர்ந்து காரிருட் டிவளு மின்போற்,

(பிரதிபேதம்)1முன்னாருமை, 2அகைத்தகைவகை வகிர்வகை நெறி 3பொழியிடை, பொழிலிடை.