(1) யின்னகையிலங்கெயிற்றுத் தேமொழித் (2) துவர்ச்செவ்வாய் நன்னுதா ளினக்கொன்று கூறுவாங் கேளினி |
எ - து: ஒளிர்கின்ற மின்னினது விளங்குகின்ற அறுதிகள் இடையே பிளந்தோடும் மேகங்கள்போலே பொன்னைக் கூறுபடுத்தின அழகினையுடைய வகிர்களை (3) ஐந்துபகுதியையுடைய நெறித்தமயிரிடத்தே விளங்கவிட்டுப் 1பின்னால் (4) தாழம்பூ வகிர்ந்தவற்றையும் இடையிலேயிட்டு முடித்த மிகவும் நாறுகின்ற பூமாலையினையும் இனிய நகையினையும் இலங்குகின்ற எயிற்றினையும் இனிய மொழியினையும் இயல்பான சிவப்பாற் சிவந்த வாயினையுமுடைய நன்றாகிய நுதலினையுடையாய்! நினக்கு ஒருவார்த்தை கூறுவேம்; அதனை இப்பொழுது 2கேள்; எ - று. இட்டென்னுஞ் செய்தெனெச்சம் இட்டவென்னும் பெயரெச்சத்தோடு முடிந்து அது நன்னுதலென்னும்பெயரோடு முடிந்தது. கூறுவாமென்றது (5) உயர்த்துக்கூறல்; (6) உளப்பாடன்று, வயங்க, விகாரம்.
பெண்ணுரைப் பிடிக்கைக்கூந்தற் பொன்னரிமாலைதாழ" சீவக. 349, 2538. 2663. (ஊ) "பொன்னரி மாலையுந், தாழ்தரு கோதையுந் தாங்கி முடிமிசை" சிலப். 6 : 106 - 8. அடியார்க்கு, மேற், (எ) "பின்னிடைச்சேர்ந்த பொன்னரிமாலை" (ஏ) "மின்னிருங் கூந்தன் மேதகப் புனைந்த, பொன்னரிமாலை" (ஐ) "புல்லகம் பொருந்திய மெல்லெ னோதிப், பொன்னரி மாலை பொலிந்த பூமுடீஇ" (ஒ) "நன்னுதன் மாதர் பின்னிருங் கூந்தற், பொன்னரி மாலாய்" பெருங். (1) 40 : 39 - 40, 349 - 50, (2) 3 : 72 - 3, 19 : 75 - 6. 1. "இலங்கெயிற் றின்னகை மாதர்" கலி. 139 : 28. 2. "துவர்த்தொண்டையஞ் செவ்வாய்" சீவக. 1074. 3. ஐம்பகுதியின்பெயர்கள் இந்நூற்பக்கம் 174 : 1-ஆம் குறிப்பிலுள்ளபடி நச்சினார்க்கினியராலும் சுருள், குரல், அளகம். துஞ்சுகுழல், கொண்டையென்று பு-வெ. உரையாசிரியராலும் கூறப்படுகின்றன. 4. (அ) "கண்ட லவிர்பூங் கதுப்பினாய்" சிறுபஞ்ச.14 (ஆ) "எதிர்பூஞ்செவ்வி யிடைநிலத் தியாத்த, முதிர்பூந் தாழை முடங்கல் வெண்டோட்டு" சிலப். 8 : 48-9. 5. "ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி...............வழக்கி னாகிய வுயர் சொற் கிளவி" (தொல். கிளவி. சூ. 27) என்பது இங்கே அறியத்தக்கது. 6. அம், ஆம் என்பன முன்னின்றாரையும் தமராயவழிப் படர்க்கையாரையும் உளப்படுக்குமென்பவாதலால், ஈண்டு உளப்பாடன்றென விளக்கினார். (பிரதிபேதம்)1பின்னற்றாழம்பூ வுதர்ந்தவற்றையும், 2கேளென்கூறி இட்டென்னும்
|