6 | நில்லென நிறுத்தா னிறுத்தே வந்து நுதலு முகனுந் தோளுங் கண்ணு மியலுஞ் சொல்லு நோக்குபு நினைஇ (1) யைதேய்ந் தன்று பிறையு மன்று | 10 | மைதீர்ந் தன்று மதியு மன்று வேயமன் றன்று மலையுமன்று (2) பூவமன் றன்று சுனையு மன்று (3)மெல்ல வியலு மயிலு மன்று சொல்லத் (4)தளருங் கிளியு மன்று எனவாங்கு; | 16 | அனையன பலபா ராட்டிப் பையென (5) 1வலைவர் போலச் சோர்பத 2னொற்றிப் நெஞ்சு நெகிழ்ந்த செவ்வி காணூஉப் |
1. (அ) உவமப்பொருளாலே சொல்லுவான் குறிக்கப்பட்டபொருளைக் கூறுபாட்டியலால் தெளியும்பக்கமு முண்டென்பதற்கு. "ஐதேய்ந்தன்று............கிளியுமன்று" என்பதை மேற்கோள்காட்டி, 'இவ்வாறு கூறியவழித் துணியாது நின்றன, நுதலும் முகனும் தோளும் கண்ணும் சாயலும் மொழியுமெனத் துணிந்தவாறு கண்டுகொள்க' என்பர், இளம்; தொல். உவம, சூ. 20. (ஆ) "தெரிநிலை யென்பது: ஒரு பொருளை ஐயப்படுதலும் துணிதலுமின்று ஆராயு நிலைமை" என்று கூறி, "ஐதேய்ந்தன்று..............................மதியுமன்று" என்பதை மேற்கோள் காட்டினர், தெய், தொல். இடை, சூ. 7. 2. "பூவமலுதல்" கலி. 62 : 4. 3. (அ) "மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு" (ஆ) "பீலி மஞ்ஞையினியலி" (இ) "நன்மா மயிலின் மென்ெ்மல வியலி" (ஈ) "மணிபுரை யெருத்தின் மஞ்ஞை போல...................ஏகுதி மடந்தை" (உ) "அணிமயி லன்ன வசைநடைக் கொடிச்சியை" (ஊ) "கட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்த, சில்வளை விறலியும்" (எ) "கலவ மஞ்ஞையிற் காண்வர வியலி" (ஏ) "வருநல மயிலன மடநடை மலைமகள்" (ஐ) "மயிலெனப்போந்து" (ஒ) "கானிரி மயிலிற் கவின்பெற வியலி" (ஓ) "மயில்கள் போலவரு மடநலீர்" 4. "தளரியற் கிள்ளை" அகம். 324 : 3. 5. (அ) "இல்வழங்கு மடமயில் பிணிக்குஞ், சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே" புறம். 252 : 4-5. (ஆ) "வலைவர்க்கு" கலி. 23 : 17. (பிரதிபேதம்)1வலையர், 2ஒற்றியென் னெஞ்சு நெகிழ்ந்த செவ்வி காணுஉப்புலையர்.
|