புலையர் போலப் புன்க ணோக்கித் (1) தொழலுந் தொழுதான் றொடலுந் தொட்டான் (2) காழ்வரை நில்லாக் கடுங்களி றன்னோன் றொழூஉந் தொடூஉமவன் றன்மை யேழைத் தன்மையோ வில்லை தோழி |
எ - து: நீ போகாதே நில்லென்று என்னை நிறுத்தினான்: நிறுத்தி அணுக வந்து நுதலையும் முகத்தையும் தோளையும் கண்ணையும் சாயலையும் சொல்லையும் நோக்காநின்று உவமையைக் 1கூறநினைந்து, நுதல் வியப்பையுடைத்தாய்த் தேய்ந்தது, ஆயினும் பிறையுமன்று; முகம்மறுவற்றது, ஆயினும் மதியுமன்று; தோள்வேயின்றன்மை 2நெருங்கிற்று, அது பிறக்கும் இடமன்று; கண் பூவின் றன்மை நெருங்கிற்று, அது பிறக்குமிடமன்று; சாயலிருந்தபடி மெத்தென நடக்கும், மயிலுமன்று, சொல்லுச்ெ்சால்லத் தளரும், ஆயினுங் கிளியுமன்று, என்று அவ்விடத்து அத்தன்மையனவாகிய உறுப்புக்கள் பலவற்றையும் பொய்பாராட்டி, வலையர் அம் மாக்களின் சோர்வைப் பார்க்குமாறு போல என்னெஞ்சழிந்த செவ்வியைப் பார்த்துப் புலையர் நோக்குமாறுபோல வருத்தமுண்டாக நோக்கித் தொழுதலைச்செய்தான்; தீண்டுதலையுஞ் செய்தான்;மதத்தான் அறிவிழந்து 3பரிக்கோலெல்லையில் நில்லாத கடிய களிற்றை யொப்பான் பலகாலும் தொழுவதுஞ்செய்யும்; தீண்டுவதுஞ் செய்யும்; ஆதலால், தோழீ! அவன் குணத்தில் அறியாமையாகிய குணமோ இல்லை; எ - று. இவன் இங்ஙனமாகவும் யான் நாணும் மடனும் நீங்காமை நின்றே 4னெனத் தலைவி தன் பெருமைசான்ற இயல்பு கூறினாள். (3) இதனுட் பாராட்டியெனப்பொய்பாராட்டலும் சோர்பதனொற்றியென நெஞ்சு நெகிழ்ந்த செவ்விகூறினமையிற்கூடுதலுறுதலும் புலையர்போல நோக்கியென நீடுநினைந்திரங்கலும் தொழலுந்தொழுதானென இடம்பெற்றுத் தழாலும் தொடலுந் தொட்டானென மெய்தொட்டுப் பயிறலும் களிறுபோல அறிவினெல்லையி னில்லாதவனெனத் தீராத் தேற்றமும் ஒரு வாற்றாற் கூறியவாறு காண்க.
1. "உண்ணலு முண்ணேன் வாழலும் வாழேன்" (கலி. 23 : 7) என்பதும் அதன் குறிப்பும் இங்கே அறியத்தக்கன. 2. "காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல்" (கலி. 2 ; 26) என்பதும் இந்நூற்பக்கம் 21. 1-ஆம் குறிப்பும் பார்க்க. 3. "பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி, யொருமைக் கேண்மையி னுறுகுறை தெளிந்தோ, ளருமை சான்ற நாலிரண்டுவகையிற், பெருமை சான்ற வியல்பின் கண்ணும்" என்பதனுரையிலும் இச்செய்யுளை மேற்கோள்காட்டி, 'இதனுட் பாராட்டியென................................மெய்தொட்டுப் (பிரதிபேதம்)1கூறிநினைந்து, 2நெருங்கினும் அது, 3வரிக்கோல், 4எனத்தன்பெருமை
|