பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி335

5தீங்கதிர் விட்டது போல முகனமர்ந்
தீங்கே வருவா ளிவள்யார்கொ லாங்கேயோர்
வல்லவன் றைஇய பாவைகொ னல்லா
ருறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால்
வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்கொ லாண்டார்
10கடிதிவளைக் காவார் விடுதல் கொடியியற்
பல்கலைச் சில்பூங் கலிங்கத்த ளீங்கிதோர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்;
இவளைச், சொல்லாடிக் காண்பேன் றகைத்து;
நல்லாய் கேள்;
15ஆய்தூவி யனமென வணிமயிற் பெடையெனத்
தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினல
மாதர்கொண் மானோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப்
பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ;
19நுணங்கமைத் திரளென நுண்ணிழை யணையென
முழங்குநீர்ப் புணையென வமைந்தநின் றடமென்றோள்
வணங்கிறை வாலெயிற் றந்நல்லாய் நிற்கண்டார்க்
கணங்காகு மென்பதை யறிதியோ வறியாயோ;
23முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையெனப்
பெயறுளி முகிழெனப் பெருத்தநின் னிளமுலை
மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நிற்கண்டா
ருயிர்வாங்கு மென்பதை யுணர்தியோ வுணராயோ;
எனவாங்கு;
28பேதுற்றாய் போலப் பிறரெவ்வ நீயறியா
யாதொன்றும் வாய்வாளா திறந்தீவாய் கேளினி
நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப்
போதர விட்ட நுமருந் தவறிலர்
நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
பறையறைந் தல்லது செல்லற்க வென்னா
விறையே தவறுடை யான்