இது "காமஞ் 1சாலா விளமை யோள்வயி, னேமஞ் சாலா விடும்பையெய்தி, நன்மையுந் தீமையு மென்றிரு திறத்தாற், றன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்துச், சொல்ெ்லதிர் பெறாஅன் சொல்லி யின்புறல், புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே" என்பதனால், (1) தருக்கிச் சொல்லிச் சொல்லெதிர்பெறான் இன்புற்றது. இதன் பொருள். | (2) ஊர்க்கா னிவந்த பொதும்பரு ணீர்க்காற் கொழுநிழன் ஞாழன் (3) முதிரிணர் கொண்டு கழும முடித்துக் கண்கூடு கூழை சுவன்மிசைத் தரதொடு தாழ வகன்மதி | (5). | தீங்கதிர் விட்டது போல முகனமர்ந் (4)தீங்கே வருவா ளிவள்யார்கொ லாங்கேயோர் |
1. தொல். அகத். சூ. 50. நச். இச்சூத்திரவுரையில் இச்செய்யுளை இளம்பூரணரும் இதற்கு மேற். காட்டினார். தொல். அகத், சூ. 53. இளம். 2. "ஊர்க்கா னிவந்த பொதும்பர்" என்பது (அ) கால் என்னும் சொல் ஏழாம் வேற்றுமைப் பொருட்கண் வந்ததற்கும் (தொல். இடை. சூ. 2. சே) (ஆ) "கண்கால் முதலியன இட வேறுபாடு உணரவரின் உருபு புலப்படாது பொருள் உணரவரும்" என்று கூறிக் காலென்பது ஊரை யடுத்தலாகிற பொருண்மேல் வந்ததென்பதற்கும் (தொல், வேற். சூ. 20. 'கண்கால்' தெய்) (இ) கால் என்பது இடப்பொருளைக்காட்டும் உருபாய்வந்ததற்கும் (நன். பெயர்.சூ. 45. மயிலை.தொன். 62) (ஈ) கால் என்பது இடப்பொருளாக வேற்றுமைசெய்யும் உருபாய் வந்ததற்கும். (உ) கால் கண்ணுருபின் பரியாய நாமமென்பதற்கும் (நன். பெயரி. சூ. 45. விருத்தி. இரா) (ஊ) ஏழாம் வேற்றுமைப்பொருளும் ஏழாம் உருபேற்ற சொல்லின் ஏகதேசமுமாகிய காலென்பது மாறி நில்லாது வந்ததற்கும் (பிரயோக.காரக.6) (எ) காலென்பது ஏழாவதன் பொருட்டாய் வந்ததற்கும் (இ-வி.சூ.251) மேற்கோள். (ஏ) "ஊர்க்கால்" என்பது கால் உருபாய் வந்ததற்கு மேற்கோள். 3. "முதிரிணர்" (கலி. 44 : 4) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 4. "தடுமாறு வரலுங் கடிவரைவின்றே" என்பதற்கு, 'உவமைக்கட் டடுமாறு வருதல் நீக்கப்படாது; தடுமாறுதலாவது ஐயமுறுதல்; எனவே ஐயநிலையுவமமுங் கண்டுகொள்க" என்றுகூறி 'ஈங்கே வருவாளிவள்....................கூற்றங்கொல்' என்ற பகுதியை. மேற்கோள் காட்டினர். இளம்; தொல்.உவமை.சூ.37. 'தடுமாறு'. (பிரதிபேதம்)1சாலவிளவை.
|