கத்தையு முடையளாயிருந்தாளாதலால் இவ்வூரிடத்துப் பிள்ளையால் 1மிடிப்பட்டாருடைய செல்வத்தையுடைய மகள்காண்; இவளைக் காத்துப் போந்தவர்கள் இப்பொழுது காவாராய்ப் புறப்படவிடுதல் 2கொடிது எ - று. (1)இவளைச், (2)சொல்லாடிக் காண்பேன் றகைத்து நல்லாய் கேள் எ - து: இனி இவளை நல்லாய்! யான் கூறுகின்றதனைக்கேள் என்று போகாமல் தடுத்து வார்த்தைசொல்லிப் பார்ப்பேன்; எ - று. இஃது ஐயுற்றுத்துணிந்து நெஞ்சொடு கூறியது. (3) மேகலையானும் கலிங்கத்தானும் ஐயம் நீங்கி மகளென்று துணிந்தான், 3மனைக்கிழத்தியாக யான் கோடல்வேண்டுமெனக்கருதி. (4)மருந்துபிறிதில்லாப் பெருந்துய ரெய்தினா னாதலின் இங்ஙனம் ஐயமும் நிகழ்ந்தது. இவ்வகை உவமைகள்"வேறுபட வந்த வுவமத்தோற்றங், கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல்" (5) என்பதனாற்
மேகலை காஞ்சி யெழுகோவை, பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள், பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு, விரிசிகை யென்றுணரற் பாற்று" (ஆ) "எண்கோவை மேகலை காஞ்சி யிருகோவை, பண்கொள் கலாபமிரு பத்தொன்று - கண்கொள், பருமம் பதினான்கு முப்பத் திரண்டு, விரிசிகை யென்றுணரற் பாற்று" என்னும் வெண்பாக்களுள் ஒன்று இதற்கு, ஆதாரமாகுமெனினும், (இ) "எண்கோவை காஞ்சி யெழுகோவை மேகலை, பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள், பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு, விரிசிகை யென்றுணரற் பாற்று" என்னும் வெண்பாவை (முருகு. 16. உரை.) மேற்கோள்காட்டி, அந்த முறையையே பிறவிடத்தும் வற்புறுத்தும் இவர் கருத்துக்கு மேகலை எண் கோவையுடைய தென்பது மாறாக உள்ளது. 1. "இவளைச் சொல்லாடிக் காண்பேன் றகைத்து" என்பது பாட்டிடை வைத்த பொருட்குறிப்பாகிய உரைவகை நடைக்கு மேற்கோள். தொல். செய். சூ. 166 : 'பாட்டிடைவைத்த' இளம். 2. "சொல்லாடச் சோர்வுபடும்" குறள். 405. 3. (அ) "நாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழை..................சூரர மகளிர்" முருகு. 18 - 41. (ஆ) "அழ லோடாப்பொற் பூணுமில்................விளக்களை யார்க்கிடம் வேறில்லை மேதினியே" திருவாவடுதுறை. 3. என்பவையும் (இ) "கோபத்தன்ன தோயாப் பூந்துகில்" முருகு. 15 என்பதும் ஈண்டறியத்தக்கன. 4. "மருந்துபிறி தில்லையா னுற்ற நோய்க்கே" நற். 80 : 1. 5. " தொல். உவம.சூ. 32. (பிரதிபேதம்)1மிடிபட், 2கொடிது; இனி இவளைநல்லாய்...................சொல்லிப் பார்ப்பே னென்றுநெஞ்சொடுகூறினான், மேகலையாங்காய், 3மனைக்கிழத்திழயாகக்கோடல்.
|