பக்கம் எண் :

340கலித்தொகை

னாலே நல்லமகளிருடைய உறுப்புக்களெல்லாவற்றையும் ஒருங்குகொண்டு ஒருவடிவாகப் பண்ணப்பட்டாளொருத்தியோ? அன்றி ஆடவர்மேலுள்ள வெறுப்பாலே தன்னைக்கூற்றமென்று அறியாதபடி மறைத்துப் பெண்வடிவுகொண்டு வந்ததோர் 1கூற்றமோ? இந்நிலையை ஓர்ந்துபாராய்; கொடிபோன்ற நுடக்கத்தினையும் (1) எண்கோவையாகிய மேகலையையும் சில பூத்தொழிலையுடையகலிங்


மகட்கென" அகம். 98 : 12 - 13. (ஓ) "பாவை யன்ன குறுந்தொடி மகளிர்" புறம். 251 : 2. என்பவற்றிற் குறித்த பாவையும் இதுவே போலும். (ஒள) இப்பாவை தெய்வத்தாற் செய்யப்பெற்றதென்பது இக்குறிப்பில் (அ, ஆ, ஈ, உ) என்பவற்றின் பின்னுள்ளவற்றாலும் (ஃ) "தெய்வப்பாவை" என்பதற்கு, 'தெய்வத்தாற் செய்த கொல்லிப்பாவை' (சீவக. 657) என்று எழுதியிருக்கும் உரையாலும் அறியலாகும். (அஅ) "பாவையிற,் போத லொல்லாளென் னெஞ்சத்தானே" நற். 201 : 11 - 12. (ஆஆ)"ஒப்பரும் பாவைபோன்று உறையும் - அவனுக்குக் கொல்லிப்பாவைபோலே தங்கும்; வேறு கருத்துச்செல்லாமல் தன்னையே கருதுவித்தலின் பாவையென்றார்" (சீவக, 197) (இஇ) "வாக்கமை பாவையொப்பார் - நீங்கலாகாமையிற் கொல்லியம்பாவை யன்னாராய்" சீவக. 667. என்பவற்றால் இது கண்டவர் மனத்தைக் கவரும் இயல்பினதென்பது புலனாகும். (ஈஈ) இப்பாவை, காமுகரைக் கொல்லும் இயல்புடைமையாற் கொல்லியெனவும் இஃதிருக்கு மலை கொல்லிமலையெனவும் முன்பு பெயர்பெற்றதென்றும் பின்பு இம்மலையே கொல்லியெனப் பெயர்பெற்றதென்றும் பெரியார் கூறுவர். (உஉ) "கொல்லிப்பா வைக்கிணையாய் நின்றதெவன் கோகனக, வல்லிப்பா வைக்கிணையா வாய்" (மாறனலங்காரம். மேற்கோள். 202) என்புழி, கொல்லிப்பாவை என்பதற்கு, காமுகரைக் கொல்லும்பாவை என்று எழுதியிருக்கும் உரையும் ஈண்டறிதற்பாலது. (ஊஊ) "கொல்லித், தெய்வங்காக்குந் தீது தீர்நெடுங்கோட், டவ்ெ்வள் ளருவிக் குடவரை யகத்துக், கால்பொரு திடிப்பினுங் கதழுறை கடுகினு, முருமுடன் றெறியினு மூறுபல தோன்றினும், பெருநிலங் கிளரினுந் திருநல வுருவின், மாயா வியற்கைப் பாவையின்" என்பதனால் இதன் வியக்கத்தக்க பெருமை அறியப்படும். (எஎ) "செருவெங் கோல மவுணர் நீங்கத், திருவின் செய்யோ ளாடிய பாவையும்" (சிலப்: 6 : 60 - 1) என்பதற்கு 'அவுணர் வெவ்விய போர் செய்தற்குச் சமைந்த போர்க் கோலத்தோடு மோகித்து வீழும்படி கொல்லிப்பாவை வடிவாய்ச் செய்யோளாகிய திருமகளால் ஆடப்பட்ட பாவையென்னும் ஆடலும்' என்று எழுதியிருக்கும் உரை இப்பாவையின் அழகாற்றலை நன்கு அறிவிக்கும்.

1. கலை யென்பதை மேகலையென்பதன் முதற் குறையாகக் கொண்டு எண் கோவையாகிய மேகலையென்றார் போலும்; (அ) "எண்கோவை

(பிரதிபேதம்)1கூற்ற மோலென யையுற்று இந்நிலையை.