பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி343

(1) மாதர்கொண் மானோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப்
பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ

எ - து: கண்டார் காதல்கோடற்குக் காரணமாகிய மான்போலும் நோக்கத்தினையும் மடப்பத்தினையுமுடைய நல்லாளே! சூட்டுமயிரினையுடைய (2) அன்ன மென்ன, அழகினையுடைத்தாகிய 1பெடையினையுடையமயிலென்ன, கல்லை யுண்கின்ற அழகிய புறவென்ன, நடையும் சாயலும் மடப்பமுமாகியநலம் நெருங்கின நின்னுடைய இவ்வெழில் நின்னைக் கண்டவர்களை மயக்கமுறுத்து மென்னும் நிலைமையை நீதான் அறிவையோ? அறியாயோ? எ - று.

இது நிலம்வரையாது வந்த கைக்கிளை. மயிலும் 2பிறவுஞ்சினையொடு சினையுவமம்.

19நுணங்கமைத் திரளென நுண்ணிழை யணையென
முழங்குநீர்ப் புணையென வமைந்தநின் றடமென்றோள்
வணங்கிறை வாலெயிற் றந்நல்லாய் நிற்கண்டார்க்
கணங்காகு மென்பதை யறிதியோ வறியாயோ

எ - து: வளைந்த முன்கையினையும் வெள்ளிய எயிற்றினையுமுடைய அழகிய நல்லாளே! (3) நிறத்தாலுந் திரட்சியாலும் புகரினது நுண்மையையுடைய மூங்கிலென்ன, (4) மென்மையால் நுண்ணிய துகிலினையுடைய அணையென்ன, (5) காமக்கடலை நீந்துதற்குத் தெப்பமாதலான் முழங்குநீரைக்கடக்கும் (6) வேழங்


கபோத கங்களே” திருவானைக்கா நாட்டுப். 111. (ஐ) ”சிறுகல்லிரை தேரும்......................புறாவினமே” விநாயக. திருநாட்டு. 44 (ஒ) ”ஒண்டூதை யுண் புறவீர்”

1. (அ) மாதர் என்பது காதலென்னுங் குறிப்பினை யுணர்த்தற்கு, ‘மாதர் கொண் மானோக்கின் மடநல்லாய்” என்பது மேற்கோள்: தொல். உரிச். சூ. 3. நச். நன். உரி - சூ. 18. இரா. இ - வி .சூ. 290. (ஆ) ”மாதர் கொண் மானோக்கின் மடந்தை” கலி. 69 : 4.

2. (அ) ”மடவன நடையுங், களிமயிற்சாயலும்” சிலப். 8 : 86 - 7. (ஆ) “புறாவை வென்றொளிர் பொற்புடைப் பூமகள்” விநாயக. அங்காரக. 6.

3. “இளவேய் நிறத்தானு மேய்க்கும்.......................அரியேறுகைப்பா டோள்” தண்டி .சூ .31. மேற்கோள்.

4. (அ) ”அணை புரைமென்மை யமைபடு பணைத்தோள்” பெருங். (2) 15 : 72. (ஆ) ”வேயினைக் கரும்பை மெல்லணையைச், சருவிடப் பசந்து திரண்டுமென்மையவாய்த் தழைத்தெழில் பிறங்கியதோளாள்” சீறா. நுபுவ்வுத்துக். தசைக்கட்டியைப் பெண்ணுரு, 26.

5. ”கொடியனாரை......................காம, நீத்துநீர்க் கடலை நீந்தும் புணையென விடுத்தல் செல்லார்” சீவக. 2804.

6. (அ) ”வேழ வெண்புணை தழீஇ” (ஆ) ”வேழத்துப் புணைதுணையாகப் புனலாடு கேண்மை யனைத்தே” அகம்.6 : 8, 186 : 8 - 9.

(பிரதிபேதம்)1பெடைமையினையுடைய, 2புறவுஞ்சினையொடு.