கோலாற்செய்த தெப்பமென்ன, பொருந்தின நின்னுடைய பெருமையை யுடைய மெல்லிய (1) தோள்கள் நின்னைக் கண்டவர்களுக்கு வருத்தமாமென்னும் நிலைமையை நீதான் அறிவையோ? அறியாயோ? எ- று. 23 | (2) முதிர்கோங்கின் (3) முகையென முகஞ்செய்த குரும்பையெனப் பெயறுளி முகிழெனப் பெருத்தநின் னிளமுலை |
1. “தோளுமுடைய வாலணங்கே” (அ) வேறுபட வந்த வுவமத் தோற்றத்துக்கு “முதிர்கோங்கின்......................இளமுலை” என்பதனை மேற்கோள் காட்டி, முதிர்கோங்கும் முற்றிய குரும்பையும் பெரியவாகலின் அவைபோலப் பெருத்த நின் இளமுலை யென்றல் ஒத்தது, பெயறுளி முகுளஞ் சிறிதாக இவற்றோடு அதனை உடன்கூறி அப்பெயறுளி குளத்திற் கில்லாத பெருமைக்குணம் பொருட்குப் பின்னர் விதந்து கூறுதலின் அதுவும் வேறுபட வந்த வுவமை யாயிற்று என்பர் பே; தொல். உவம. சூ. 32, (ஆ) கலியடி பதினேழெழுத்தான் வந்ததற்கு “முதிர்கோங்கின் ............................. குரும்பையென” என்பது மேற்கோள்; தொல். செய். சூ. 55 ‘அளவடி’ இளம். (இ) ”முதிர்கோங்கின் முகை” என்பது குற்றுகரவீறு இன்பெற்று வருதற்கு மேற்கோள். (தொல். குற். சூ. 78.) (ஈ) ”யாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப், பூணகத் தொடுங்கிய வெம்முலை” சிறுபாண். 25 - 6. (உ) ”முலையேர் மென்முகை யவிழ்ந்த கோங்கின்” குறுந். 254: (ஊ) “கோங்குமுகைத்தன்ன குவிமுலை” அகம். 240 : 11. (எ) கோங்கின் முழுவனப் பெய்திய முற்றா விளமுலை” புறம். 336 : 9 - 10 (ஏ) ”கோங்கரும் பன்ன முலையாய்” நாலடி. 400. (ஐ) ”கோங்கேர்முலைப் பூந்திருவே” சிறுபஞ்ச. 45. (ஒ) ”அரும்பெறற்காதலோ டணிநமக் காகிய, மருங்குலுமாகமும் வருந்தப் போந்த, கருங்கண் வெம்முலை யரும்பினழித்து, வண்பொற் றட்ட மலர்ந்தவாதலி, னண்பிற் கொத்தில நம்மோ டிவையெனக், கோங்கள் குறுகல் செல்லாரியல” பெருங் : (2) 12 : 100 - 5. (ஒ) ”மின்னிகர் மருங்குற் பிறைநுதற் கனிவாய் வெண்ணகைக் கருங்குழலவடான், பன்னிரு பருவ மடைந்துபைங் கோங்கின் பனிமுகை யெனமுலை முகிழ்த்தாள்” பிரமோத்தர. உமாமகேசுவரபூசை. 3. (ஒள) ”யாணர்க் கோங்கின் மென்முகிழ்முலை” பாக. (10) கோவியர். 13. (ஃ) ”யாணர்க் கோங்கின் குவிமுகையெள்ளிப், பூணகத் தொடுங்கியமுலை” ஞானாமிர்தம் ........................... (அஅ) ”கோங்கிற் குவித்து பணைத்தமுலை” உத்தரகோச. தீர்த்தச்சிறப்பு. 29. (ஆஆ)“அலர்முலை யதரநே ரான கோங்கமு, மிலவமு மெல்லடி யினைவுறாவகைத், தலைவனோடவ்வுழிச் சார்ந ரின்புற, நிலைபெறு பஞ்சியி னெறிக டூர்க்குமே” திருவானைக்கா. திருநாட்டு. 108. “முலைமுகஞ் செய்தன” அகம். 7 : 1.
|