(1) மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நிற்கண்டா ருயிர்வாங்கு மென்பதை யுணர்தியோ வுணராயோ |
எ - து: மயிர்நேரிதான வரிகளையுடைய முன்கையினையும் மடப்பத்தினையுமுடைய நல்லாளே! முற்றின கோங்கமரத்தினது இளையமுகையென்ன, 1அடிவரைந் துகட்புலனான (2) குரும்பையென்ன, பெய்தற்றொழிலையுடையமேகத்தின் றளியாலுண்டான (3)மொக்குளென்ன, பெருத்த நின்னுடைய இளைய முலைகள் நின்னைக் கண்டவர்களுடைய உயிரை வாங்கிக்கொள்ளுமென்னும் நிலைமையை நீதான் அறிவையோ? 2அறியாயோ? எ - று. எனவாங்கு எ - து: என்று யான் கூறாநிற்க: எ - று. ஆங்கு, அசை. 28 | (4) பேதுற்றாய் போலப் பிறரெவ்வ நீயறியா 3யாதொன்றும் (5) வாய்வாளா திறந்தீவாய் கேளினி (6) நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமருந் தவறிலர் |
1. “மயிர்வார் முன்கை” ஐங்குறு. 218. 2. (அ) ”குரும்பை மென்முலை” அகம். 253 . 22. (ஆ) ”குரும்பையங் கொங்கைநாகர் கோதையர்” கம்ப. களியாட்டுப். 2. (இ) ”குரும்பை மென்முலையார்” நைடதம். நாட்டு. 11. (ஈ) ”குரும்பைமுலை வள்ளி” திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்............... (உ) ”குரும்பை போற்கிளர் குவிமுலைக் கௌரியோடு” உத்தரகோச. பார்ப்பதிதவம். 59. 3. “கோங்கரும்பு பந்து கொலைச்சூது தாளமொக்குள்” இரத்தினச். 17. 4. (அ) “பேதுறலஞ்சி” அகம். 4 : 11; (ஆ) ”பாவை பேதுற” சீவக, 1364; (இ) ”பேதுறவு மொழிந்தனள்” (ஈ) ”பெரும்பே துற்றதும்” சிலப். 12 : 51, 13 : 66; (உ) ”பெரும்பேதுற்று விளியும்” பெருங். (2) 20 : 28. 5. (அ) ”வாய்வாளா நின்றாள் செறிநகை” பரி. 20 : 46 - 7; (ஆ) ”வாய்வா ளேனிற்ப” கலி. 65 : 15. 6. (அ) ”நீயுந்தவறிலை................தவறுடையான்” என்பது சொல்லுவான் குறிப்பினாற் பொருளறிய வந்தமைக்கும் (நன். பெயரியல்.சூ.12. மயிலை) (ஆ) ”நீயுந்தவறிலை.................தவறிலர்” என்பது திணையும் பாலும் விளங்கலில்லாத சொற்களுள் நீயென்பது குறிப்பாற்பெண்பா லுணரநிற்றற்கும் (தொல். பெயரி. சூ. 39. நச்; சூ. 37. ‘இன்ன பெயரே’ தெய்.) மேற்கோள். (இ) ”நீயுந் தவறிலை நின்கை யிதுதந்த,
|