பக்கம் எண் :

346கலித்தொகை

(1) நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
(2) பறையறைந்தல்லது செல்லற்க வென்னா
விறையே தவறுடை யான்

எ - து: 1நீ மயக்கமுற்றாய்போலே பிறருடைய வருத்தத்தை அறியாயாய்க் கேட்டார்க்கு யாதொன்றுஞ் சொல்லாயாய்க் கழிந்துபோகின்றவளே! இப்பொழுது யான் கூறகின்றதனைக் கேள்; நீயும் குற்றமுடையையல்லை; நின்னை இற்புறத்தே புறப்படவிட்ட நும்முடைய சுற்றத்தாரும் குற்றமுடையரல்லர்; குற்றமுடையான் யாவனென்னில், (3) நிறையழிந்தகொல்கின்ற (4) யானையை நீர்க்குவிட்டாற் பறைசாற்றிச் செல்லுமாறுபோல, பறைசாற்றிச் செல்வ


பூவெழிலுண்க ணவளுந் தவறிலள், வேனிற் புனலன்ன நுந்தையை நோவார் யார, மேனின்று மெள்ளி யிதுவிவன் கைத்தந்தா, டான் யாரோ வென்று வினவிய நோய்ப்பாலேன். யானே தவறுடையேன்” கலி. 84 : 36 - 41. (ஈ) ”வந்தோன் கொடியனு மல்லன் றந்த, நீதவ றுடையையு மல்லை நின்வயி, னானா வரும்படர் செய்த, யானே தோழி தவறுடை யேனே” அகம். 72 : 19 - 22.

1. “நிறையழி யானை நெடுங்கூ விளியும்” மணி. 7 : 67.

2. (அ) ”வெரூஉப் பறை நுவலும் பரூஉப் பெருந் தடக்கை, வெருவரு செலவின் வெகுளி வேழம்” பொருந. 171 - 2. (ஆ) ”தெண்கிணை முன்னர்க் களிற்றி னியலி” புறம் : 79 : 3. (இ) ”பாகும் பறையும் பருந்தின்பந்தரு, மாதுல மாக்களுமல வுற்றுவிளிப்ப” மணி. 4 : 41 - 2. (ஈ) ”பறை நிறை கொல்யானை” (உ) ”அறைபறை யானை” முத்தொள். (ஊ) ”பறைவன் களிற்றுப்........................பாஞ்சாலர்க்கு” வில்லி. சூது. 225.

3. யானைக்கு நிறையுடைமையாவது : ”இருநிலநனைப்பவிழி தருகடாத்துக் கைம்மிகக் களித்த கவுள தாயினுஞ்செயிர்கொண் மள்ளர் செருவிடத் தல்ல, துயிர்நடுக் குறாமை” பெருங். (1) 38 : 118 - 121. யானை நிறையழிதல் : ”காழோர் கையற மேலோரின்றிப், பாகின் பிளவையிற் பணைமுகந் துடைத்துக், கோவியன் வீதியுங் கொடித்தேர் வீதியும், பீடிகைத் தெருவும் பெருங்கலக்குறுத்து....................பாகும் பறையும் பருந்தின் பந்தரு, மாதுல மாக்களு மலவுற்று விளிப்ப, நீல மால்வரை நிலனொடு படர்ந்தெனக், காலவேகங் களிமயக்குற்றென” “நீல யானை மேலோ ரின்றிக், காமர்செங்கை நீட்டிவண்டுபடு, பூநாறு கடாஅஞ் செருக்கிக் கால்கிளர்ந்து, நிறையழி தோற்றமொடு தொடர” என (மணி. 4 : 35 - 44, 19 : 20 - 23,) வருவனவற்றால் அறியலாகும்.

4. “கையது கையோ டொருதுணி கோட்டது, மொய்யிலைவேன் மன்னர் முடித்தலை - பைய, வுயர் பொய்கை நீராட்டிச் செல்லுமே யெங்கோன், வயவெம்போர் மாறன்களிறு” தொல். புறத். சூ. 17. நச். மேற்.

(பிரதிபேதம்)1என்றியான் கூறாநிற்க நீ மயக்க.