தல்லது பறைசாற்றாமற் செல்லாதொழிகவென்று சொல்லாத இறைவனே யென்க: எ - று. இதனால், தலைவற்கு அசைவென்னும் அழுகை பிறந்தது. இது புணர்த னிமித்தமாதலிற் 1குறிஞ்சியுட்கோத்தார். இது தான் உயிர்கொடுத்தானாகத் தனது நன்மைகூறி அவள் 2தீங்குங் கூறினான். இது முன் ஒரு நெடுவெண்பாட்டும் ஓர் அம்போதரங்கமும் தனிச்சொல்லும் 3தாழிசையும் பின்னும் ஒரு தனிச்சொல்லும் வெள்ளைச்சுரிதகமும் பெற்றுவந்த கொச்சகக்கலிப்பா. (20) (57). | வேயெனத் திரண்டதோள் வெறிகமழ் வணரைம்பான் மாவென்ற மடநோக்கின் மயிலியற் றளர்பொல்கி யாய்சிலம் பரியார்ப்ப வவிரொளி யிழையிமைப்பக் கொடியென மின்னென வணங்கென யாதொன்றுந் தெரிகல்லா விடையின்கட் கண்கவர் பொருங்கோட வளமைசா லுயர்சிறப்பி னுந்தைதொல் வியனக ரிளமையா னெறிபந்தோ டிகத்தந்தாய் கேளினி; | 8 | பூந்தண்டார்ப் புலர்சாந்திற் றென்னவ னுயர்கூடற் றேம்பாய் வவிழ்நீலத் தலர்வென்ற வமருண்க ணேந்துகோட் டெழில்யானை யொன்னாதார்க்கவன்வேலிற் சேந்துநீ யினையையா லொத்ததோ சின்மொழி; | 12 | பொழிபெயல் வண்மையா னசோகந்தண் காவினுட் கழிகவி னிளமாவின் றளிரன்னா யதன்றலைப் பணையமை பாய்மான்றே ரவன்செற்றார் நிறம்பாய்ந்த கணையினு நோய்செய்தல் கடப்பன்றோ கனங்குழாய்; | 16 | வகையமை தண்டாரான் கோடுயர் பொருப்பின்மேற் றகையிண ரிளவேங்கை மலரன்ன சுணங்கினாய் மதவலி மிகுகடாஅத் தவன்யானை மருப்பினுங் கதவவாற் றக்கதோ காழ்கொண்ட விளமுலை; எனவாங்கு; | 21 | இனையன கூற விறைஞ்சுபு நிலநோக்கி நினையுபு நெடிதொன்று நினைப்பாள்போன் மற்றாங்கே துணையமை தோழியர்க் கமர்த்த கண்ணண் மனையாங்குப் பெயர்ந்தாளென் னறிவகப் படுத்தே. |
(பிரதிபேதம்) 1 குரிஞ்சி யுடனே, 2 தீங்கு கூறினான், 3 தாழிசையும் வெள்ளைச்.
|