இதுவும் அது. இதன் பொருள். (1) வேயெனத் திரண்டதோள் வெறிகமழ் வணரைம்பான் (2) 1மாவென்ற மடநோக்கின் 2மயிலியற் றளர்பொல்கி (3) யாய்சிலம் பரியார்ப்ப வவிரொளி யிழையிமைப்பக் கொடியென மின்னென 3வணங்கென யாதொன்றுந் தெரிகல்லா (4) விடையின்கட் (5)கண் 4கவர் பொருங்கோட 5வளமைசா லுயர்சிறப்பி னுந்தைதொல் வியனக ரிளமையா னெறிபந்தோ டிகத்தந்தாய் கேளினி |
எ - து: (6) மூங்கிலென்னும்படி திரண்ட தோளினையும் மணம் நாறுகின்ற கடை குழன்ற ஐம்பாலினையும் மானோக்கினை வென்ற மடப்பத்தையுடையநோக்கினையும் மயில்போன்ற சாயலினையுமுடையையாய், அழகிய சிலம்பு உள்ளிடுமணி ஆரவாரிப்ப, விளங்குகின்ற ஒளியினையுடையகலங்கள்விளங்க, (7) நுடக்கத்தாற்
1. இச்செய்யுள் உள்ளப்புணர்ச்சியுற்ற தலைமகன் வரைதல்வேண்டிப் பாங்கற்குரைத்தற்கு மேற்கோள்; தொல். கள. சூ. 7. இளம். 2. (அ) ‘மாவென்ற மடநோக்கின்’ என்பது வினைபயன் மெய்யுருவென்ற வற்றுக்கு உரியனவென்று பாகுபடுத்துணர்த்தப்பட்ட சொற்களன்றி மரபினான்வரு முவமச்சொல்லுக்கு மேற்கோள். தொல். உவமை. சூ. 17. இளம் (ஆ) ”மானோக்கின்” (இ) ”மாதர்கொண் மானோக்கின் மடந்தை” (ஈ) ”மானோக்கி” கலி. 30 : 10, 69 : 4, 87 : 11, (உ) ”மானேர் நோக்கின் வளைக்கை யாய்ச்சியர்” தண்டி. சூ. 19. மேற்கோள். (ஊ) ”மானேர் நோக்கம்” சிலப். 7:44. (எ) ”மானினோக்கி” சீவக. 359. 3. “ஆய்சிலம் பெழுந்தார்ப்ப வஞ்சில வியலுநின்” கலி. 59 : 7. 4. ”இடைவனப்பும்” ஏலாதி. 75. 5. (அ) ”கண்கவர் காரிகை” இறை. சூ. 7. மேற்கோள். ‘பையுண்மாலைப்’ ஆ) ”கண்கவர் வனப்பின்” (இ) ”கண்ணுங் கவர்ந்திட வனப்புவாய்ந்த, வொண்டொடி” நைடத. அன்னத்தைத்தூது. 12, போர்புரி. 5. 6. (அ) ”வேயிற் றிரண்டதோள் வேற்கண்ணாய்” பழ. 34 (ஆ) ”வேயே திரண்மென்றோள்” (இ) ”வேயழத் திரண்ட மென்றாள்” சீவக. 652. 2923. (ஈ) ”வேயெனத் திரண்டதோள் விளங்கு மேனியாள்” சூளா. கல்யாண. 220. 7. “கொடியென நுடங்கி வேளெனக் கரந்து ...................... மின்னெனப் பிறங்குநுண் ணுசுப்பை” காஞ்சிப். மாசாத்தன். 15. (பிரதிபேதம்)1மான்வென்ற, 2மயிலியலாற்றளர், 3அணங்கென வியாதொன்றும், 4கவர் பெருங்கோட, கவர்பெழுந் தோட, 5வளமையாலுயர்.
|