பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி349

கொடியென்ன (1) விளக்கத்தான் மின்னென்னக் கட்புலனாகாமையின் வருத்தமென்ன யாதொன்றுந்தெரியாத இடையிடத்தே கண்கள்விரும்பிச் சேர ஓட, நின்னுடைய இளமைப்பருவத்தாலே செல்வம் அமைந்த உயர்ந்த தலைமையினையுடைய (2) நுந்தையுடைய பழமையுடைத்தாகிய அகற்சியையுடைய மனையினின்றும் அடிக்கின்ற பந்தோடே தளர்ந்து ஒதுங்கிப்புறப்படுதலைச் செய்தவளே! இப்பொழுது யான் கூறுகின்றதனைக் கேள்: எ - று.

(8). (3) 1பூந்தண்டார்ப் புலர்சாந்திற் றென்னவ னுயர் (4) கூடற்
றேம்பாய வவிழ்நீலத் தலர்வென்ற வமருண்க
ணேந்துகோட் டெழில்யானை யொன்னாதார்க் கவன் (5)வேலிற்
சேந்துநீ யினையையா லொத்ததோ (6) சின்மொழி

எ - து: சிலவான மொழியினையுடையாய் ! பூவினையுடைய குளிர்ந்த மாலையினையும் புலர்ந்த சந்தனத்தினையுமுடைய பாண்டியனது உயர்ந்த மதுரையிடத்துத் தேன்பரக்கும்படி அவிழ்ந்த நீலத்தினது அலரைவென்ற போரையுடைய கண்கள் தலையேந்தின கோட்டையும் அழகினையுமுடைய யானை யினையுடைய பகைவர்க்கு அப்பாண்டியன் வேல் மனம் வருத்துமாறுபோலச்


1. “மின்னென நுடங்கு மருங்குலும்” (தொல். கள. சூ. 11. மேற்கோள் ‘கண்ணெண’) என மின், நுடக்கத்தாலும் உவமை கூறப்படுமாயினும் கொடிக்கு நுடக்கங் கூறப்பட்டமையின் விளக்கமட்டுமே கூறினார்.

2. நுந்தையென்பது முறைப்பெயர் இடமும் நகரம் பற்றுக்கோடும் ஆக வரும் மொழிமுதற் குற்றியலுகரச்சொல்லென்பதும் இதன் முதலை இதழ்குவியாது குறையக் கூறல்வேண்டுமென்பதும் இதழ் குவித்துக் குறுகாதபடி முற்றக் கூறியவழியும் பொருள் வேறுபடாதென்பதும் தொல். மொழி. சூ. 34 - 5. இள. நச்; உரைகளால் அறியலாகும்.

3. ”பூந்தண்டார்...........................சின்மொழி” என்பது முன்னோர் கூறிய காமக்குறிப்பினும் செந்துறைப் பாட்டின்கண்வரும் வண்ணப்பகுதி வரைதலில்லையென்பதற்கு, மேற்கோள். தொல். புறத். சூ. 22. ‘வழங்கியன்’ இளம்.

4. இந்நூற்பக்கம் 295 : 1-ஆம் குறிப்புப்பார்க்க.

5, (அ) ”அடுமுரண் முன்பிற் றன்னைய ரேந்திய, வடிவே லெஃகிற் சிவந்த வுண்கண்” புறம். 350 : 8 - 9. (ஆ) ”அடையார்த் துரந்த வருந்திற லயிலவன், படைத்தலை பெயர்த்த கறையெஃகம் போலக், கடைசிவந் தனவே கருங்கயன் மழைக்கண்” நாற். சூ. 147. மேற்கோள்; ‘வாள்போழ்’ (இ) ”புண்டலை வேலினுங் கண்சிவப் பார” (ஈ) ”வென்றி வேல்போற்சி வந்து” தஞ்சை. 63 ; 68.

6. “சின்மொழி” இந்நூற்பக்கம், 159 : 1-ஆம் குறிப்புப்பார்க்க.

(பிரதிபேதம்)1பூந்தண்டார் புலர்.