சிவந்து வருத்தஞ்செய்து நீ இத்தன்மையையா யிரா நின்றாய், இது நின் இளமைக்குத் தக்கதோ: எ - று. கண்சேந்தினையையென்றது, சினைவினை முதலொடு முடிந்தது. 12 | 1பொழி (1) பெயல் வண்மையா னசோகந்தண் காவினுட் கழிகவி னிளமாவின் றளிரன்னா யதன்றலைப் பணையமை பாய்மான்றே ரவன்செற்றார் நிறம்பாய்ந்த கணையினு நோய்செய்தல் கடப்பன்றோ கனங்குழாய் |
எ - து; பொன்னாற்செய்த குழையினையுடையாய் ! பொழிகின்ற பெயல்போலுங் கொடையினையுடைய பாண்டியனது அசோகமரத்தினையுடைய குளிர்ந்த பொழிலிடத்துநின்ற மிக்க அழகினையுடைய இளைய (2) மாவினது தளிரை யொத்த நிறத்தினையுடையையாய் அங்ஙனம் வருத்துதற்கு மேலே பந்தியிலே நிற்றலமைந்த பாய்ந்துசெல்லுங் குதிரைபூண்ட தேரையுடைய பாண்டியனாற் செறப்பட்டவர்கள் மருமத்தே தைத்த அம்பினுங்காட்டில் நோவைச்செய்தல் உலகிற் கொடுமைகளின் மிக்க கொடுமையன்றோ? எ - று. 16 | வகையமை தண்டாரான் கோடுயர் (3) 2பொருப்பின்மேற் றகையிண ரிள (4) வேங்கை மலரன்ன சுணங்கினாய் |
1. (அ) ”பெயன்மழைத் தடக்கைப் ..................... நல்லியக் கோடனை” சிறுபாண். 124 - 6. (ஆ) ”மழைசுரந் தன்ன வீகை நல்கி” மலை படு. 580. (இ) ”அவன், வண்கைபோல் வானம் பொழிந்தநீர் பரி. 22 : 7 - 8 (ஈ) ”வானத்தன்ன வண்மையும்” (உ) ”மாரியன்ன வண்மைத், தேர்வேளாயை’ (ஊ) ”வரையா மரபின் மாரிபோல...............பேகன், கொடைமடம் படுதலல்லது” (எ) ”மாரி யீகை மறப்போர் மலையனும்” (ஏ) ”மாரியன்ன வண்மையிற் சொரிந்து” புறம். 55 : 15, 133 : 6 - 7, 142 : 3 - 5; 158 : 7, 397 : 16. (ஐ) ”மாரியி னேற்பார்க் கவைநல்கி” (ஒ) ”மாரிமழை வள்ளல்” சீவக. 365, 500 (ஓ) ”கார்நிகர் வண்கை” நன், சிறப்பு. என்பவைகள் ஈண்டறிதற்பாலன. 2. (அ) ”மாவி, னவிர்தளிர் புரையு மேனியர்” முருகு, 143 - 4, (ஆ) ”தேமா மேனி” சிறுபாண். 176. (இ) ”மாந்தளிரே மாமேனி” சீவக. 652. (ஈ) ” மாவி னிளந்தளி ரன்ன நயத்தகு மேனியும்” (உ) ”மாந்தளிர் மேனியும்” (ஊ) ”மாந்தளிர் மேனி” நைடத, அன்னத்தைத். 23. 3. பொருப்பென்பது பொதியின் மலையின் பெயராதலை இந்நூற்பக்கம் 195 : 1-ஆம் குறிப்பால் உணர்க. 4. வேங்கைமலர் சுணங்குக்கு உவமையாதல், “வேங்கைவீ முற்றெழில் கொண்ட சுணங்கணி பூணாகம்” (கலி. 64 : 26 - 7.) என்பதனாலும் அதன் குறிப்பாலும் அறியலாகும். (பிரதிபேதம்)1மொழிபெயல், 2பரப்பின்.
|