மதவலி 1மிகுகடாஅத் தவன் (1) யானை மருப்பினுங் (2) கதவவாற் றக்கதோ காழ்கொண்ட விளமுலை |
எ - து: (3) வகுப்பமைந்த குளிர்ந்த தாரினையுடையபாண்டியனது (4) சிகரங்களுயர்ந்த (5) பொதியின்மலையிடத்து அழகினையுடைய கொத்துக்களையுடைய இளைய வேங்கைப்பூவையொத்த சுணங்கினையுடையாய் ! முத்துவடத்தைத் தன்னிடத்தேகொண்ட நின்னுடைய இளையமுலைகள் இப்பருவத்திலும் அப்பாண்டியனுடைய மிகுதியையுடைய வலியினையும் மிகுகின்ற கடாத்தினையு முடையயானையினுடைய கொம்புகளிலுங் கோபத்தினையுடைய வாயிராநின்றன, இக்கொடுமை இப்பருவத்திற்குத் தக்கதோ? எ - று. என வாங்கு; எ - து; என்று; எ - று, ஆங்கு; அசை. 21 | இனையன கூற விறைஞ்சுபு 2நிலநோக்கி 3நினையுபு நெடிதொன்று நினைப்பாள்போன் மற்றாங்கே துணையமை தோழியர்க் கமர்த்த கண்ணள் மனையாங்குப் பெயர்ந்தா(6)ளென் னறிவகப் படுத்தே |
1. (அ) ”கொடுங்கே ழிரும்புற நடுங்கக் குத்திப் புலிவிளை யாடிய புலவு நாறு வேழத்தின், றலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின், கண்ணே கதவ வல்ல” நற். 39 : 4 - 7. (ஆ) ”கொடியனவாங்கொலை யானையின் கோடு” தஞ்சை. 68. 2. (அ) ”கதத்தினையுடைய வென்னும் பொருளில் ‘கதவ’ என அஃறிணைப் பன்மைவினைக்குறிப்பு வகர வீற்றான்வந்ததற்கு, ”கதவவாற் றக்கதோ காழ்கொண்டவிளமுலை” என்பது மேற்கோள்; தொல்: வினை. சூ. 24. கல். நச். (ஆ) ”தொடலை தைஇய மடவரன் மகளே, கண்ணினுங் கதவநின்முலையே” ஐங். 361. (இ) ”கண்ணே கதவவல்ல” நற். 397. 3. (அ) ”வகைத்தார் மார்பன்” பெருங். (4) 4 : 7 (ஆ) ”முறிமிடை படலைமாலை” - ‘வகைமாலை’ சீவக. 1889. (இ) ”பூவார் முறிமிடை படலைமாலை” சூளா. துறவு. 23என்பவைகள் இங்கே ஒப்புநோக்கற்பாலன. 4. (அ) ”ஏற்றரு நெடுஞ்சிமைப், புகலரும் பொதியில்” அகம். 322 : 13 - 4. (ஆ) ”ஓங்குயர் மலையத்து” மணி. 1 : 3. (இ) கோடுயரடுக்கத்து” தமிழ்நெறி.மேற்கோள். 5. (அ) ”பொதியில், வேங்கையுங் காந்தளு நாறி” குறுந். 84 (ஆ) ”அடுக்கத்த, விடர்வரை யெரிவேங்கை யிணர்” கலி. 45 : 16 - 7. 6. ”என்பால, வென்னைவிட்டிகத்தர விறந்தீவாய்” கலி. 59 : 8 - 9. (பிரதிபேதம்)1கமழ்கடா அத்தவன், 2நிலனோக்கி, 3நினைகுபு.நினைவன.
|