எ - து : 1இத்தன்மையனவற்றை யான் நெடிதொன்று நினையாநின்று கூற அதற்கு ஒன்று கூறாதே கவிழ்ந்து நிலத்தைப் பார்த்துப் பின்னை அவ்விடத்தே தோழியரை நினைப்பாள்போலே துணையாயமைந்த தோழியர்க்குப் பொருந்தின கண்ணையுடையளாய் என் அறிவைத் தன்னிடத்தே அகப்படுத்திக்கொண்டு 2தன்மனையிடத்தே மீண்டுபோனாள்; எ - று. இஃது ஏமஞ்சாலாவிடும்பையெய்திக் கூறினது. நெடிதொன்று நினையாநின்றென்றது தான் சிறிதுநாட் சென்றால் வரைந்துகோடலை நினையாநின்றென்றதாகக்கொள்க. நினைப்பாள்போலென்றதனால் அவன் கூற்றினையும் இதுவுமொன்றெனச் சிறிதுகொண்டமையுந் தோன்றிற்று. இதனால், தலைவற்கு அசைவென்னும் உவகை பிறந்தது. 3இஃது ஏழடித்தரவும் நான்கடித்தாழிசையுந் தனிச்சொல்லும் நான் கடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலிப்பா. (21) (58). | வாருறு வணரைம்பால் வணங்கிறை நெடுமென்றோட் பேரெழின் மலருண்கட் பிணையெழின் மானோக்கிற் காரெதிர் தளிர்மேனிக் கவின்பெறு சுடர்நுதற் கூரெயிற்று முகைவெண்பற் கொடிபுரையு நுசுப்பினாய் நேர்சிலம் பரியார்ப்ப நிரைதொடிக்கை வீசினை யாருயிர் வௌவிக்கொண் டறிந்தீயா திறப்பாய்கேள்; | 7 | உளனாவென் னுயிரையுண் டுயவுநோய் கைம்மிக விளமையா னுணராதாய் நின்றவ றில்லானுங் களைநரி னோய்செய்யுங் கவினறிந் தணிந்துதம் வளமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்; | 11 | நடைமெலிந் தயர்வுறீஇ நாளுமென் னலியுநோய் மடமையா னுணராதாய் நின்றவ றில்லானு மிடைநில்லா தெய்க்குநின் னுருவறிந் தணிந்துதம் முடைமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்; | 15 | அல்லல்கூர்ந் தழிவுற வணங்காகி யடருநோய் சொல்லினு மறியாதாய் நின்றவ றில்லானு மொல்லையே யுயிர்வௌவு முருவறிந் தணிந்துதஞ் செல்வத்தாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்; எனவாங்கு; |
(பிரதிபேதம்)1என்றித்தன்மையன, 2தன்னிடத்தே மீண்டுபோனா னெனவேமஞ்சாலா விடும்பை யெய்திக்கூறினான் நெடி. 3இது ஏழடி.
|