பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி353

ஒறுப்பின்யா னொறுப்பது நுமரையான் மற்றிந்நோய்
பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் பொலங்குழாய்
மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி
நிறுக்குவென் போல்வல்யா னீபடு பழியே.

இதுவும் அது.

இதன் பொருள்.

(1) வாருறு (2) வணரைம்பால் வணங்கிறை நெடுமென்றோட்
பேரெழின் மலருண்கட் (3) பிணையெழின் மானோக்கிற்
(4) 1காரெதிர் தளிர்மேனிக் கவின்பெறு 2சுடர்நுதற்
கூரெயிற்று முகைவெண்பற் கொடிபுரையு நுசுப்பினாய்
நேர்சிலம் பரியார்ப்ப 3நிரைதொடிக்கை வீசினை
யாருயிர் வௌவிக்கொண் டறிந்தீயா திறப்பாய்கேள்

எ - து; கோதுதலுற்றகடைகுழன்ற (5) ஐம்பாலினையும் வளைந்த இறையினையுடைய நெடிய மெல்லிய தோளினையும் பெரிய அழகினையுடைய 4மலர்போலுங் கண்ணினையும் மான்பிணையினது அழகினையுடைய வெருவின நோக்குப்போலும் நோக்கினையும் மழையைப்பெற்ற தளிர்போலும் நிறத்தினையும் அழகுபெறுகின்ற பிறைபோன்ற நுதலினையும் (6) விழுந்தெழுந்த கூரிய


1. “வாருறு வணர்கதுப் புளரி” குறுந். 82.

2. (அ) ”வணரைம்பால்” கலி. 57 : 1 (ஆ) ”வணர்கரி யைம்பாலோய்” சிலப். 7 : 31.

3. (அ) ”பிணையெழின் மானோக்கின்” (கலி .27 : 3) என்பதும் அதன் குறிப்பும் (ஆ) ”மான்பிணையன்ன மகிழ்மடநோக்கே” (புறம்.354 : 10) என்பதும் ஈண்டறிதற்பாலன.

4. ”தளிபொழி தளிரன்ன வெழின்மேனி” கலி. 13 : 19.

5. (அ) ”நெய்யிடை நீவி மணியொளி விட்டன்ன, வைவகை பாராட்டி னாய்மற்றெங் கூந்தற், செய்வினை பாராட் டினையோ வைய” (ஆ) ”இளையவ ரைம்பால் போல்” கலி. 22 : 12 - 4, 29 : 6.

6. (அ) ”போழுறு பகுவாயிற் பொலிதரு மெயிறோடும், வீழுறு நகையாலும் விரிகுரு தியினாலும், தாழுறு மதிதன்னைத் தார்கை நிரைசூழ, வூழுற வமர்செவ்வா னொத்ததவ் வுழியன்றே” கந்த. முதனாட்பானு, 148.

(பிரதிபேதம்)1காரெதி ரொளிர்மேனி, 2பிறைநுதற், 3நிரைதொடி வீசினை, 4மலர் போலும் அழகிய மான்போலும் கண்ணையும் மேகமறைத்தலாற் சுடரெதிர் தோன்று மிந்திரதறுப்போலும் அழகிய நுதலினையும் வெள்ளிய பல்லினையுமுடைய.