பக்கம் எண் :

354கலித்தொகை

எயிற்றினையும் விழுந்தெழாத முகைபோலும் வெள்ளிய பல்லினையுமுடைய கொடியையொக்கும் இடையினையுடையாய் ! காலுக்குப்பொருந்தினசிலம்பின் உள்ளிடுமணி ஆரவாரிப்ப நிரைத்த தொடியையுடைய கையை வீசினையாய்ப் பெறுதற்கரிய என்னுயிரைக்கொண்டு இளமையாற் கைக்கொண்டதனை அறியாதே போகின்றவளே ! யான் கூறுகின்றதனைக் கேள்;
எ - று.

(7). (1) உளனாவென் னுயிரையுண் (2) டுயவுநோய் 1கைம்மிக
விளமையா னுணராதாய் நின்றவ றில்லானுங்
களைநரி னோய்செய்யுங் கவினறிந் தணிந்துதம்
வளமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்

எ - து: வருத்தத்தினையுடைய (3) காமநோய் கைம்மிகும்படியாக யான்சிறிது உயிருடனே இருக்கும்படி என்னுயிரை வாங்கிக்கொண்டு நின் இளமைப் பருவத்தாலே அறியாமற் போகின்றவளே! நின்னிடத்துத் தப்பில்லையாயினும் (4) நின்னையொழியப் போக்குவார் பிறர் இல்லாத நோயைச் செய்யும் அழகை யறிந்துவைத்தும் அதன்மேலே (5) ஒப்பித்துத் தஞ் செல்வச்செருக்காலே புறப்படவிட்ட நும்முடைய சுற்றத்தாரைத் தவறுடையரல்லரென்று கூறலாமாகிற் கூறு; 2அஃது, அரிது: எ - று.

11நடைமெலிந் தயர்வுறீஇ நாளுமென் னலியுநோய்
மடமையா னுணராதாய் நின்றவ றில்லானு


(ஆ) ”முளையெயிறு நிரம்பா விளமைப் பருவத்து” தமிழ்நெறி. மேற்கோள். (இ) ”முன்ப லரும்பிய பானாறு செவ்வாய்ப், புன்றலை மகாஅர்” ஆசிரியமாலை.

1. (அ) ”உண்ணின்ற நோய்மிக வுயிரெஞ்சு துயர்செய்தல், பெண்ணன்று” கலி. 60 : 6 - 7. (ஆ) ”இலனென்று தீயவை செய்யற்க” (குறள்.205) என்புழி இலன்என்பதில் அன் விகுதி தனித்தன்மையில் வந்ததென்பதற்கு, ”உளனாவென் னுயிரையுண்டு” என்பதை மேற்கோள் காட்டினர்; பரிமேலழகர்.

2. (அ) ”உயவுநோய்க் குயிர்ப்பாகி” (ஆ) ”உயவுநோய்க் குய்யுமா றுரைத்துச்செல்” கலி. 35 : 22. 113 : 3.
(இ) ”உயாவே யுயங்கல்” தொல். உரி.சூ. 71.

3. ”காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோ”

4. (அ) ”நின்முகந் தான்பெறி னல்லது கொன்னே, மருந்து பிறிதி யாது மில்லேல்” கலி. 60 : 20 - 21. (ஆ) ”பிணிக்கு மருந்து பிறமனணியிழை, தன்னோய்க்குத் தானே மருந்து” குறள். 1102.

5. ஒப்பித்தல் - அலங்கரித்தல்.

(பிரதிபேதம்)1கைமிக, 2அது அரிது(தாழிசை மூன்றினுரையிலும்).