பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி355

(1) மிடைநில்லா தெய்க்குநின் னுருவறிந் தணிந்துதம்
முடைமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்

எ - து: (2) அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி என்னும் ஒழுக்கந் தேய்ந்து மறத்தலை எனக்கு உறுத்தி நாடோறும் என்னை நலிதற்குக் காரணமான நீ செய்த நோயை நினது மடப்பத்தாலே அறியாமற் போகின்றவளே! நின்னிடத்துத் தப்பில்லையாயினும் நிற்கமாட்டாதே இளைக்கும் இடையையுடைய 1நின் வடிவை அறிந்துவைத்தும் அதன்மேலே ஒப்பித்துத் தஞ்செல்வச்செருக்காலே புறப்படவிட்ட நும்முடைய சுற்றத்தாரைத் தவறுடையரல்லரென்று கூறலாமாகிற் கூறு; அஃது அரிது; எ - று.

15அல்லல்கூர்ந் தழிவுற வணங்காகி யடருநோய்
சொல்லினு மறியாதாய் நின்றவ றில்லானு
மொல்லையே யுயிர்வௌவு முருவறிந் தணிந்துதஞ்
செல்வத்தாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்

எ - து: நெஞ்சழிந்து வருத்தமிக்குக் கெடும்படி வருத்தமாகி மேன்மேலும் அடர்ந்துவருகின்ற காமநோயைக் குறிப்பான் 2அறிதலன்றிச்சொல்லிக் காட்டினும் அறியாதவளே! நின்னிடத்துத் தப்பில்லையாயினும் ஒழுக உயிரைவாங்காது விரைய உயிரைவாங்கும் நின் வடிவை அறிந்துவைத்தும் அதற்குமேலே ஒப்பித்துவைத்துத் தஞ் செல்வச்செருக்காலே புறப்படவிட்ட நும்முடைய சுற்றத்தாரைத் தவறுடையரல்லரென்று கூறலாமாயிற் கூறு; அஃது அரிது; எ - று.

ஆயினும், ஆனுமெனக் குறைந்து3 நின்றது. அழிபுகவென்றும் பாடம்.

எனவாங்கு, அசை.

20ஒறுப்பின்யா னொறுப்பது நுமரையான் மற்றிந்நோய்
(3) பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் (4) பொலங்குழாய்

1. ”பிணையேர்மட நோக்குநாணுமுடையாட், கணியெவனோ வேதிலதந்து” (குறள்.1089.) என்பதற்கு, பரிமேல் எழுதிய உரையும், ‘இவட்குப் பாரமாதலும் எனக்கு அணங்காதலுங் கருதாமையின், அணிந்தார் அறிவிலரென்பதாம்’ என்னும் விசேடவுரையும் இங்கே அறிதற்பாலன.

2. அறிவு முதலியவற்றின் பொருள், இந்நூலிறுதியிலுள்ள அகராதியில் விளக்கப்பெறும்.

3. (அ) ”பொறைநில்லா நோயோடு” (ஆ) ”உரிதென் வரைத்தன்றி யொள்ளிழை தந்த, பரிசழி பைதனோய்” கலி. 3 :4; 138 : 20 - 21.

4. ”பொன்னென் கிளவி” (தொல். புள்ளி. சூ. 61) என்னும் சூத்திரமும் அதற்கு இளம். நச், எழுதியுள்ள உரையும் நோக்குக.

(பிரதிபேதம்)1நின்னையறிந்து, 2அறிதலின்றி, 3நின்றது எனவாங்கு ஆங்கசை ஒறுப்பின்.