பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி357

10மருளியான் மருளுற விவனுற்ற தெவனென்னு
மருளிலை யிவட்கென வயலார்நிற் பழிக்குங்கால்
வையெயிற் றவர்நாப்பண் வகையணிப் பொலிந்துநீ
தையினீ ராடிய தவந்தலைப் படுவாயோ;
14உருளிழா யொளிவாட விவனுண்ணோ யாதென்னு
மருளிலை யிவட்கென வயலார்நிற் பழிக்குங்காற்
பொய்தல மகளையாய்ப் பிறர்மனைப் பாடிநீ
யெய்திய பலர்க்கீத்த பயம்பயக் கிற்பதோ;
18ஆய்தொடி யைதுயிர்த் திவனுண்ணோ யாதென்னு
நோயிலை யிவட்கென நொதுமலர் பழிக்குங்காற்
சிறுமுத்த னைப்பேணிச் சிறுசோறு மடுத்துநீ
நறுநுத லவரொடு நக்கதுநன் கியைவதோ;
எனவாங்கு;
23அனையவை யுளையவும் யானினக் குரைத்ததை
யினையநீ செய்ததுத வாயாயிற் சேயிழாய்
செய்ததன் பயம்பற்று விடாது
நயம்பற்று விடனில்லை நசைஇயோர் திறத்தே.

இஃது இரந்துகுறையுற்றுப் பின்னின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியைநோக்கி இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய் தவம் இன்றாமெனக் கூறியது.

இதன் பொருள்.

தளைநெகிழ் பிணிநிவந்த பாசடைத்(1)தாமரை
முளை 1நிமிர்ந் தவைபோலு முத்துக்கோ லவிர்தொடி
(2)யடுக்கநா றலர்காந்த 2ணுண்ணேர்தண் ணேருருவிற்
(3)றுடுப்பெனப் புரையுநின் றிரண்டநே ரரிமுன்கைச்

1. ”தாமரை, முளைநிவந் தவைபோலு முத்துக்கோ லவிர்தொடி” என்பதை, குறிப்பு மொழியுள் விகாரத்திற்கு மேற்கோள் காட்டி, கோலமென்பது கோலெனக் கடைக்குறைந்து வந்ததென்பர். மயிலைநாதர்; நன். பெயர். சூ 12.

2. (அ) ”சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள்” குறுந். 239. (ஆ) ”நறுந்தண் சிலம்பி னாறுகுலைக் காந்தள்” ஐங். 226.

3. (அ) ”துடுப்பெனப் ............................. விளையாட’ என்பது, ஒரு வேற்றுமை யுருபு தொடர்ந்தடுத்துவந்த சொற்கள் ஒரு முடிக்குஞ் சொல்லால்

(பிரதிபேதம்)1நிவந்தவை, 2நுண்ணே ரேருருவிற்.