5 | சுடர்விரி 1வினைவாய்ந்த (1) தூதையும் பாவையும் விளையாட வரிப்பெய்த வழகமை புனைவினை (2) யாய் 2சிலம் பெழுந்தார்ப்ப வஞ்சில வியலுநின் பின்னுவிட் டிருளிய வைம்பால்கண் டென்பால வென்னைவிட் டிகத்தர விறந்தீவாய் கேளினி |
எ - து: 3முறுக்கு அவிழ்ந்ததும் அரும்புகள் நீருக்குமேலே ஓங்கின பசிய இலையினையுடையதுமான தாமரையினது வளையம் வளர்ந்தவையிற்றை யொக்கும் (3) முத்தை அழுத்திச்செய்த திரட்சியையுடைய விளங்குகின்ற தொடியினையுடைய, அடுக்கமெல்லாம் நாறுகின்ற கூரிய அழகினையுடைத்தாகிய அலர்களையுடைய காந்தளினது குளிர்ந்த (4) எழுச்சியையுடைத்தாகிய வடிவினையுடைய துடுப்பென்று கூறும்படியாக ஒக்குந் திரண்ட தம்மில் இணையொத்த மெல்லிய முன்கையினாலே (5) இங்குலிகம் எழுதின ஒளிவிரிந்த
முடிந்ததற்கு மேற்;தொல், வேற்-மயங். சூ. 19. நச், (ஆ) ”காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன, செறிதொடி முன்கை” பட் 153 - 4. (இ) ”காந்த ணறுங்குலை யன்ன, நலம்பெறு கையினென் கண்புதைத்தோயே” ஐங் 293. (ஈ) ”கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள்” பரி. 19 : 76. (உ) ”பஃறுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்த, ளணிமலர் நறுந்தாதூதுந் தும்பி, கையாடு வட்டிற் றோன்று, மையாடு சென்னிய மலைகிழ வோனே” அகம். 108 : 15 - 18. (ஊ) ”காம்பமை சிலம்பிற் கடிநாட் காந்தட், பூந்துடுப் பன்ன முன்கையின்" (எ) “காந்தட், பூந்துடுப் பன்ன புனைவளை முன்கை” பெருங். (2) 15 : 73 - 4, (4) 11 : 78 - 9. (ஏ) ”கைவிரிந்தன காந்தளும்” சூளா. நாடு. 11. 1. ”மண்டூதை யாக்கிய சோறீந் திட மகிழ்ந்தார்” மறைசையந். 25. 2. ”இன்மணிச் சிலம்பிற் சின்மொழி யைம்பாற், பின்னொடு கெழீஇய தடவர” கலி. 125 : 16 - 7. 3. (அ) ”கைக்குவான்முத்தின் சரிவளைபெய்து” திருவாரூர்த்திருவிசைப்பா. 1. (ஆ) ”துணிகதிர் முத்திற் செய்த வங்கதந் தோளிற் பூட்டி” (இ) ”நிலவுமிழ் மணியிற் செய்த வங்கத நெடுந்தோள் சாத்தி” காஞ்சி. திருமண. 36 ; 48. 4. ”ஏராவது எழுச்சி; அது எழுகின்ற நிலைமையென நிகழ்காலமே குறித்துநிற்கும்” என்பது (தொல். பொருளி. சூ. 53. நச்.) ஈண்டும் நோக்கற்பாலது. 5. இங்குலிகம்-சாதிலிங்கம். (பிரதிபேதம்)1வரிவாய்த்த, வரிவாய, 2சிலம்பரி யார்ப்ப, மஞ்சொலவியனும், சிலம்பரிபெழுந்தார்ப்ப, 3தனைநெகிழ் தாமரை முறுக்கவிழ்ந்த தாமரை, பிணிநிவந்த பாசடைத்தாமரை-அரும்புகள் நீருக்குமேலே யோங்கின பசிய விலையினை யுடைய தாமரை; தாமரைவளையம் வளர்ந்த.
|