தொழில்களையுடையவாகிய வாய்களையுடைய மரத்தாற்செய்த சிறுபானையாலும் பாவையாலும் விளையாடுதற்கு, உள்ளிடுமணியிட்ட அழகமைந்தபுனைந்த தொழில்களையுடைய அழகிய 1சிலம்புகள் மிக ஆரவாரிப்ப அழகினையுடைய சில அடியிடாநடக்கும் நின்னுடைய இளமை நீங்குதலாற் பின்னுதல் விட்டு இருண்ட ஐம்பாலைக்கண்டு என்னிடத்துண்டாகிய (1) அறிவுமுதலியன என்னை விட்டுப் போம்படியாகப் போகின்றவளே! யான் கூறுகின்றதனை இப்பொழுது 2கேள்; எ - று. தளைநெகிழ் தாமரை, பிணிநிவந்தபாசடைத் தாமரையென்க. 10 | மருளி (2) யான் மருளுற விவனுற்ற தெவனென்னு மருளிலை யிவட்கென வயலார்நிற் பழிக்குங்கால் வையெயிற் றவர்நாப்பண் வகையணிப் பொலிந்துநீ (3) தையினீ ராடிய தவந்தலைப் படுவாயோ |
எ - து; யான் மயக்கமுறுகையினாலே அதுகண்டு தானும் மருண்டு இவனுற்ற நோய் யாதுதானென்று கேட்கும் அருள் இவட்கு இல்லை யென்று யான் 3கூற, அதுகேட்டு அயலார் நின்னைப் பழிக்குமளவிற் கூரிய
1. ”மனையாங்குப் பெயர்ந்தாளென் னறிவகப் படுத்தே” கலி. 57 : 24. 2. “ஆருயிர் யாதொன் றிடருறு மாங்கதற், கோருயிர் போல வுருகி யுயக்கொள்ள, நேரி னதுமுடி யாதெனி னெஞ்சகத், தீர முடைமை யருளி னியல்பே” சூளா. துறவு. 170. 3. நீராடலும் தவமென்பது (அ) ”நீஇ ராடல்.....................ஏற்ற தவத்தினியல்பென மொழிப” (தொல். புறத்திணையியல். சூ. 20. மேற்.) (ஆ) ”தவநதி போகு மருமறைத்தாபதர்” கல் : 6 : 11. (இ) ”சங்கையி னதிகண் முற்று மாடிய தவத்தின் பேறும்” திருவிளை. தலவிசேடப். 11. என்பவற்றால் அறியலாகும். (ஈ) ”தையினீராடுதல் மகளிர்க்கு உரிய தென்பது, “இன்று இவ்வூராரெல்லாந் தைந்நீராடுப” என்பது உயர் திணைக்கண் தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல்லுக்கும் (தொல். கிளவி. சூ. 50. இள;) உயர்திணை ஆணொழி வினைக்கும் (நன். பொது. சூ. 1. மயிலை) (உ) ”இவ்வூர்மக்களெல்லாம் தைந்நீராடினர்” என்பது பெண்பாலென வினையினாற் பொருள்விளங்கிற்றென்பதற்கும் (தொல். கிளவி. சூ. 51 '.அவற்றுள் வினைவேறு' தெய்.) (ஊ) ”இன்று இச்சேரியார் தைந்நீராடுவர்” என்பது உயர்திணையிடத்துத் தொழிலிற் றோன்றும் ஆணொழி மிகுசொல்லுக்கும் (நேமி. சொல். 11. உரை) (எ) ”மருவூரார் தைந்நீராடினார்” என்பது வினைச்சொல் உயர்திணை ஆணையொழித்து வந்ததற்கும் (நன். பெயரி.சூ. 12. மயிலை) மேற்கோள்களாகக் காட்டப்பெற்றிருத்தலால் விளங்கும். அவருள்ளும் (பிரதிபேதம்)1 சிலம்புமிக் காரவாரிப்ப, சிலம்புகள் மிக்காரவாரிப்ப, 2கேள், மருளியான், 3கூறுவது கேட்டவயலார்.
|