பக்கம் எண் :

360கலித்தொகை

எயிற்றினையுடைய இளையமகளிர்க்கு நடுவே வகுப்புடைய கோலத்தாலே பொலிவு பெற்று நீ தைத்திங்களில் நீராடிய (1) நோன்பின் பயனைப் பெறுவையோ? பெறாய்காண்; எ - று,

14 உருளிழா யொளிவாட விவனுன்ணோ யாதென்னு
மருளிலை யிவட்கென வயலார்நிற் பழிக்குங்கால்
பொய்தல மகளையாய்ப் பிறர்மனைப் பாடிநீ
யெய்திய 1பலர்க்கீத்த பயம்பயக் கிற்பதோ

எ - து; தலையிற் கிடந்து அசையுந் (2)தலைப்பாளையையுடையவளே! ஒளிகெடும்படி இவன்மனத்தில் உண்டாகிய நோய் யாதென்று கேட்கும் அருள் இவட்கு இல்லையென்று யான் 2கூற அது கேட்டு அயலார் நின்னைப் பழிக்குமளவில் நோன்பாகிய விளையாட்டினையுடைய மகளாந் தன்மையையுடையையாய்ப் பிறர் மனையின்கண்ணே ஐயமேற்றுப் பாடி நீ ஆண்டுப் பெற்ற வையிற்றைப் பிறர்க்குக் கொடுத்ததனாலுள்ள பயன் நினக்குப் பயன் தருவதொன்றே? தாராதுகாண்;
எ - று.

பொய்தல, அகரஞ் செய்யுள் விகாரம்,

18ஆய்தொடி யைதுயிர்த் திவனுண்ணோ யாதென்னு
நோயிலை யிவட்கென நொதுமலர் பழிக்குங்காற்
(3) சிறுமுத்த னைப்பேணிச் சிறுசோறு மடுத்துநீ
3நறுநு லவரொடு நக்கதுநன் கியைவதோ

எ - து: ஆராய்ந்திட்ட தொடியினையுடையாய்! நீதான் ஐதாக உயிர்த்து இவன்மனத்திலுண்டாகிய நோய் யாதென்று கேட்கும் நோய் இவட்கு இல்லை யென்று யான் 4கூற அதுகேட்டு அயலார் நினைப்பழிக்குமளவிற் சிறிய


கன்னியர்க்கே உரியதென்பதை, (ஏ) “நறுலீ யைம்பான் மகளிராடுந், தைஇத் தண்கயம் போலப், பலர்படிந்து” (ஐங். 84,) (ஐ) “தாயருகா நின்று தவத்தைந்நீ ராடுதல்” (பரி. 11. 91,) என்பவை வலியுறுத்தும்,

1. நோன்பின் பயன், சிறந்தவனைக் கணவனாகப் பெறுதலென்ப.

2, “நடுச்சிகை முத்துத்தாமம்” (சீவக, 2731) என்பதற்கு, ‘சிகைநடு விற் ற லைப்பாளை’ என்று இவ்வுரையாசிரியரும் "தொய்யகம்” (சிலப். 6 : 107,) என்பதற்கு, "தலைப்பாளை" என்று அரும்பத வுரையாசிரியரும் ‘பூரப்பாளை’ என்று அடியார்க்கு நல்லாரும் எழுதியிருப்பவை இங்கே அறிதற்பாலன,

3, ‘‘குறுநிலக் கோமா னந்த, முத்தனை யன்றிப் பின்னை யாரையே முதன்மை செய்தான்’’ வில்லி. சூதுபோர். 14

(பிரதிபேதம்)1பலர்க்கீய்த்த, 2கூறுவது கேட்டு அயலார், 3 நறுநுதனலவரொடு நக்கநன்கு, 4கூறுவது கேட்டு அயலார்.