பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி361

குழமகனைப் பேணி வளர்த்து அவனுக்கு வேறொருத்தியுடைய (1) 1பெண் மகனைக் கோடற்குச் சிறுசோற்றைச் சமைத்து ஆயத்திற்கு இட்டு நீ நறிய நுதலையுடைய மகளிரோடே மகிழ்ந்த நோன்பின் பயன் நினக்கு வந்து பொருந்துமோ? பொருந்தாது 2காண்; எ - று.

எனவாங்கு

எ-து; என்று; எ - று. ஆங்கு ,ஆசை.

23 அனையவை (2) யுளையவும் யானினக் குரைத்ததை
3யினையநீ செய்ததுத வாயாயிற் சேயிழாய்
செய்ததன் பயம்பற்று விடாது,
4நயம்பற்று விடினில்லை நசைஇயோர் திறத்தே

எ - து: 5நீ நெஞ்சுளையவும் யான் நினக்குக்கூறியது சேயிழாய்! நின்னை நச்சினோர் திறத்தே வருந்தும்படி நீ செய்த கொடுமைக்கு நீ ஒர் உதவி செய்யாயாயின் நீ செய்த (3) அத்தீங்கினாலுள்ள பயன் நின்னைப் பற்றுதல் விடாது,


1. இச்சொல், "பெண்மையடுத்த மகனென் கிளவி" (தொல். பெயரி. சூ. 9 10) என்றும், "மகடூஉ மருங்கிற் பாறிரி கிளவி" (தொல். பெயரி. சூ, 40) என்றும் ஆசிரியரால் வழங்கப்பெறுதலும் "பெண்மையடுத்த மகனென் கிளவி" (தொல். பெயரி. சூ. 10) என்பதற்கு, 'புறத்துப்போய் விளையாடும் பேதைப்பருவத்துப் பெண்மகளை மாறோகத்தார் இக்காலத்தும் பெண்மகனென்று வழங்குப' என்று சேனாவரையராலும் 'கட்புலனாயதோர் அமைதித்தன்மை யடுத்து நாணுவரை யிறந்து புறத்து விளையாடும் பருவத்தாற் பால்திரிந்த பெண்மகனென்னும் பெயர்ச்சொல்' என்றும் 'பெண்மகனென்பது அத் தன்மையாரை அக்காலம் அவ்வாறே வழங்கினாராயிற்று' என்றும் இவ்வுரையாசிரியராலும் விளக்கம் எழுதப்பெற்றிருத்தலும் இங்கே அறிதற்பாலன

2. "உளைய வுரைத்து விடினு முறுதி, கிளைகள்வாய்க் கேட்பது நன்றே" பழமொழி. 299.

3. (அ) " உறற்பால நீக்க லுறுவர்க்கு மாகா" நாலடி. 104. (ஆ) "வேண்டினும் வேண்டா விடினு, முறற்பால, தீண்டா விடுத லரிது" நாலடி. 109. பழ. 62 (இ) "வினைப்பகை, வீயாது பின்சென் றடும்" (ஈ) ”உறற்பால, வூட்டா கழியு மெனின்” (உ) ”ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று, சூழினுந் தான்முந் துறும்" குறள். 207 378 380 (ஊ) "ஒளிப்பினு மூழ்வினை யூட்டாது கழியாது" இறை. சூ, 2. உரை, மேற்கோள். (எ) "ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉம்" சிலப். பதி, 57

(பிரதிபேதம்)1பெண் மணையை, 2காண் ஆங்கசை, 3இனையநீ, 4நயம்பற்றி, 5என்றுநீ.