பக்கம் எண் :

362கலித்தொகை

அதுவேயுமன்றி (1) நீ அருளைப் பற்றுவிடுவையாயின் நினக்குஅனையவை பயன்றருதலில்லை; 1எ - று.

நச்சினோரெனத் தன்னைப் பிறர்போற் கூறினான், நயம் - அருள் அனையவையென்றது, (2) தைந்நீராடன் முதலியவற்றை,

இதனால், தலைவற்கு இழிவுபிறந்தது தலைவிக்குச் 2சூழ்ச்சிபிறந்தது,

3இஃது ஒன்பதடித்தரவும் நான்கடித்தாழிசையும் தனிச்சொல்லும் நான்கடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (23)

(60).சுணங்கணி வனமுலைச் சுடர்கொண்ட நறுநுதன்
மணங்கமழ் நறுங்கோதை மாரிவீ ழிருங்கூந்த
னுணங்கெழி லொண்டித்தி நுழைநொசி மடமருங்குல்
வணங்கிறை வரிமுன்கை வரியார்ந்த வல்குலாய்;
5கண்ணார்ந்த நலத்தாரைக் கதுமெனக் கண்டவர்க்
குண்ணின்ற நோய்மிக வுயிரெஞ்சு துயர்செய்தல்
பெண்ணன்று புனையிழா யெனக்கூறித் தொழூஉந் தொழூதே
கண்ணுநீ ராக நடுங்கின னின்னகா
யென்செய்தான் கொல்லோ விஃதொத்தன் றன்கட்
10பொருகளி றன்ன தகைசாம்பி யுள்ளு
ளுருகுவான் போலு முடைந்து;
12தெருவின்கண், காரண மின்றிக் கலங்குவார்க் கண்டுநீ
வாராண வாசிப் பதம்பெயர்த்த லேதில
நீநின்மேற் கொள்வ தெவன்;
15அலர்முலை யாயிழை நல்லாய் கதுமெனப்
பேரம ருண்கணின் றோழி யுறீஇய
வாரஞ ரெவ்வ முயிர்வாங்கு
மற்றிந்நோய் தீரு மருந்தருளா யொண்டொடீ;
19நின்முகங் காணு மருந்தினே னென்னுமா
னின்முகந் தான்பெறி னல்லது கொன்னே

1 (அ) "நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற், றேரினு மஃதே துணை" (ஆ) "அருளற்றா ரற்றார்" குறள். 242, 248; (இ) "அறனு மருளுடையான் கண்ணதேயாகும்" (ஈ) "நெகிழ்ந்த வருளினானாகு மறம்" சிறுபஞ்ச. 3, 35.

2. "தைஇத் திங்கட் டண்கயம் படியும், பெருந்தோட் குறுமகள்" (நற். 80 : 7 - 8) எனவருதலும் காண்க.

(பிரதிபேதம்)1ஆகலினென்றாள், 2சூட்சி, 3இது ஒத்தாழிசைக்கலி.