| மருந்து பிறிதியாது மில்லேற் றிருந்திழா யென்செய்வாங் கொல்லினி நாம்; பொன்செய்வாம்; | 24 | ஆறு விலங்கித் தெருவின்க ணின்றொருவன் கூறுஞ்சொல் வாயெனக் கொண்டதன் பண்புணராந் தேற லெளிதென்பா நாம்; ஒருவன் சாமா நெளிதென்பா மற்று; | 28 | சிறிதாங்கே, மாணாவூ ரம்ப லலரி னலர்கென நாணு நிறையு நயப்பில் பிறப்பிலி பூணாக நோக்கி யிமையா னயந்துநங் கேண்மை விருப்புற் றவனை யெதிர்நின்று நாணடப் பெயர்த்த நயவர வின்றே. |
இது தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளோடு உறழ்ந்து அவனது குறைநயப்பக் கூறியது. இதன் பொருள். (1)சுணங்கனி வனமுலைச் சுடர்கொண்ட நறுநுதன் மணங்கமழ் நறுங்கோதை (2) மாரிவீ ழிருங்கூந்த னுணங்கெழி 1லொண்டித்தி நுழை(3) நொசி மடமருங்குல் வணங்கிறை வரிமுன்கை வரியார்ந்த வல்குலாய் |
1. (அ) "சுணங்கணி யாகத், தீர்க்கிடைப் போகா வேரிள வனமுலை" பொரு. 35 - 36. (ஆ) "பொன்பெறு பூஞ்சுணங்கின் மென்முலையாய்" சிறுபஞ்ச. 48 2. "மாரிவீழிருங்கூந்தல்" கலி. 14 : 4; 131 : 21. "தத்த மரபிற் றோன்றுமன் பொருளே" என்னுஞ் சூத்திரவுரையில், மரபு என்பது பயிற்சியை; இதனானே நூல்செய்கின்றகாலத்து வினைமுதலாகிய பொருள்கள் ஓதிய வாய்பாட்டான்வருதல் பெருவழக்கென்று கொள்ளப்படும்' என்று கூறி வினை முதலியவற்றுக்குப் பாகுபடுத் துணர்த்தப்பட்ட சொற்களன்றி மரபாற் பிறசொல் வந்ததற்கு, ‘மாரிவீ ழிருங்கூந்தல்' என்பதை மேற்கோள்காட்டினர் இளம்பூரணர்; தொல். உவம. சூ, 17 3. நொசிவு நுண்மையுணர்த்துதற்கு (அ) "நொசி மருங்குல்" என்பது மேற், தொல். உரி. சூ. 7. 8, சே. (ஆ) ‘‘நொசிந்த மருங்குலள்’’ பெருங். (1) 54 : 60. (இ) "நுழைநொசி மருங்கல்" நைடத. சுயம்வர. 142். (பிரதிபேதம்)1ஒண்டுத்தி.
|