பக்கம் எண் :

364கலித்தொகை

எ - து; 1சுணங்கு அணிந்த அழகையுடைய முலையினையும் (1) பிறையின் றன்மையைக்கொண்ட நறிய நுதலினையும் நறிய மாலையினையுடைய மணம் நாறுகின்ற மழை விரும்புங் கரிய கூந்தலினையும் 2கூர்மையையுடைய அழகினையும் (2) நோக்கினார்கண் சென்று நுழைந்துபார்க்கும் நுண்மையாலே அவர்க்கு அறியாமையைக் கொடுக்கும் மருங்குலையும் வணங்குகின்ற இறையினையுடைய வளையணிந்த முன்கையினையுமுடைய ஒள்ளிய 3தித்தியாகிய வரி நிறைந்த வல்குலையுடையவளே; எ - று.

(5). (3) கண்ணார்ந்த நலத்தாரைக் கதுமெனக் கண்டவர்க்
குண்ணின்ற நோய்மிக வுயிரெஞ்சு துயர்செய்தல்
பெண்ணன்று புனையிழா யெனக்கூறித் தொழூஉந் தொழுதே
4கண்ணுநீ ராக நடுங்கின னின்னகா
(4) யென்செய்தான் கொல்லோ (5) விஃதொத்தன் றன்கட்
10பொருகளி றன்ன தகைசாம்பி யுள்ளு
ளுருகுவான் போலு முடைந்து

எ - து: இனிய நகையினையுடையாய்! நின்னைநோக்கித் தொழூஉம்; 5தொழுதபின், புனையிழாய்! என்னை நோக்கி, 6உலகத்திற்கண்ணுக்குநிறைந்த நலத்தினையுடைய மகளிரைக் கண்டவர்களுக்கு உண்ணின்ற காமநோய் மிகும்படி கடுக உயிர்போந் துயரைச் 7செய்தல் அவர்க்குப்பெண்டன்மையன்றெனக் கூறிக் (6) கண்ணும் உருகநின்று நடுங்கினான்; நடுங்கி இவனொருத்தன் தன்


1. ”சுடர்நுதல்” (கலி. 58:3.) என்பதற்கு எழுதிய வுரையும் நோக்குக.

2. ”நோக்கு நுழைகல்லா நுண்மைய” பொருந. 82.

3. ”கண்ணார் கண்ணி” பொருந. 148; சிறுபாண். 65.

4. ”என்செய்தான் கொல்லோ............................உடைந்து” எனத் தோழி கூறிய வழி, ‘தெருவின்கட் காரணமின்றிக் கலங்குவார்க்கண்டு’ எனவும் ‘அலர்முலை.....................(நாம் ‘ எனத் தோழி கூறியவழி) ‘பொன்செய்வாம்’எனவும் தலைவி உறழ்ந்து கூறினாளென்று கூறி 'இது தலைவன் வருத்தங்கூற அதனை யேற்றுக்கொள்ளாது உறழ்தலின் வழுவாய் நாண்மிகுதியாற் கடிதின் உடம்படாமையின் அமைந்தது' என்பர் நச். (தொல். பொருளி. சூ. 44.)

5. “இஃதொத்தன்” கலி.64:8; என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. அ) ”மெய்யுருகிக் கண்ணுருகி நெஞ்சுருகிக் காம வெயில் வெண்ணெய்ப் பாவைபோன் மெலிகின்றாரே. சீவக. 682. (ஆ) ”கண்புன லூருமென் காதல்” தஞ்சை. 395.

(பிரதிபேதம்)1சுணங்கணிந்தழகிய முலை, 2கூரிய, 3துத்தியாகிய, 4கண்ணினீராக. 5தொழுதபின்னர் என்னைநோக்கி, 6உலகத்திற்குக் கண்ணுக்கு, 7செய்த வர்க்குப்பெண்.