பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி365

னிடத்துப் பொருகின்ற களிற்றையொத்த தன்மைகெட்டு மனமுடைந்து உள்ளேயுள்ளே உருகுவான்போலே இராநின்றான்; இவன் ஈண்டு வந்து என்ன காரியஞ்செய்தான்கொல் என்றாள்; எ - று.

ஒருத்தனென்பது இடைக்குறைந்துநின்றது.

12 (1)தெருவின்கண், காரண மின்றிக் கலங்குவார்க் கண்டுநீ
வாரண வாசிப் பதம் 1பெயர்த்த லேதில
நீ நின்மேற் கொள்வ தெவன்

எ - து; அதுகேட்ட தலைவி நீ நம்மாற் றமக்கு நிகழ்ந்ததோர் காரணமின்றியிலே தெருவின்கட் கலங்குவார் சிலரைக் கண்டு நினக்கு ஏதிலவா யிருப்பனவற்றை நீ நின்மேல் ஏறட்டுக் கொள்கின்றதன்மை வாரணவாசியிலுள்ளார் பெறும் அருளுடைமையாகிய பதத்தை நீ நின்னிடத்தே ஏறட்டுக் கோடல்காண்; இது நமக்கு என்னாய் விளையும்?
2எ - று.

(2) பிறர்வருத்தந் தம்வருத்தமாகக் கொண்டு ஒழுகுவதனை வாரணவாசி யென்னும் ஊரிலுள்ளார் 3பதமென்றாள்.
இது “கூறிய வாயில் கொள்ளாக் காலை” (3) தலைவிகூறியது.

15அலர்முலை யாயிழை நல்லாய் கதுமெனப்
(4) பேரம ருண்க 4ணின் றோழி யுறீஇய
(5) வாரஞ ரெவ்வ முயிர்வாங்கு
(6) மற்றிந்நோய் தீரு மருந்தருளா 5யொண்டொடீ


1. ”தெருவின்கண்................................கொள்வதெவன்” என்பது (அ) தோழி, தலைவற்குக் குறைநேர்ந்து வாயிலாகிக் குறைநயப்பக் கூறியவழி, தலைவி அவள்கூற்றினை யேற்றுக்கொள்ளாது மறுத்ததற்கும் (தொல். களவி. சூ. 20. நச்.) (ஆ) பாங்கியைத் தலைவிமறைத்தற்கும் (நாற்கவி. சூ. 147.) மேற்கோள்.

2. ”மலயத்து நின்றும்’(கோவையார். 139) என்புழி 'மலயத்து வாழ்வார் பிறர்க்கு வருத்தஞ் செய்யாராகலின்' என்று குறிப்பு எழுதியிருத்தலும் ஈண்டு அறிதற்பாலது.

3. தொல். கள. சூ. 20.

4. "பேரம ருண்கண்” கலி. 146 :

5. ”நேரிறை வளைத்தோ ணின்றோழி செய்த, வாரஞர் வருத்தங் களையா யோவென” தொல். கள. சூ .23. நச். 'நெருநலு' மேற்.

6. (அ) “மற்றிந்நோய்தீரு மருந்தருளாயொண்டொடீ” “நின்முகங்காணு மருந்தினே னென்னுமால்” என்புழி நோய் தீர்தற்குக் காரணமாகிய

(பிரதிபேதம்)1பெயர்தலேத்தில, 2என்றாள் அலர், 3பிறர்பதமென்றார் இது, 4என்றோழி, 5ஒண்டொடீ நின்முகங்காணு.....................எ - து அதுகேட்ட..