உறுத்தின பொறுத்தற்கரிய மனக்கவற்சியைச் செய்யும் வருத்தம் கதுமென உயிரைவாங்கும்; அஃது உயிரைவாங்காதபடி ஒண்டொடீ! பின்னை 1இந்நோய் தீர்தற்குக் காரணமான மருந்தை அருளாய்; அம்மருந்துதான் மிகவும் 2அரிதன்று; நின்முகங்காண்டல்காரணமாக அதன்காரியமாகப் 3பிறந்த அருளை 4மருந்தாதற்றன்மையாக உடையேனென்று கூறாநின்றான்;ஆதலால் அவன் றான் நின்முகத்தை இக்காலத்தே பெறின் அது மருந்தாவதல்லது வேறு சிறிதும் மருந்தில்லையாயிருக்குமாயின், 5திருந்திழாய் ! இனி நாம் என்செய்யக் கடவேமென்றாள் ; எ - று. நின்முகங் 6காணு மருந்தினேனென்றது தலைவியைக்கருதி, மற்று, வினைமாற்று, கொன், காலமுணர்த்திற்று. கொல், ஐயம். பொன்செய்வாம் எ - து; அதுகேட்ட தலைவி பொன்செய்வாம் என நகைக்குறிப்புக் கூறினாள். அஃது ”இசைதிரிந்திசைப்பினும்” என்னும் (1)பொருளியற்சூத்திரத்துக் 7 கூறினோம். 24 | ஆறு விலங்கித் தெருவின்க ணின்றொருவன் கூறுஞ்சொல் வாயெனக் கொண்டதன் 8பண்புணராந் தேற லெளிதென்பா நாம் |
எ - து; அவள் நகைக்குறிப்புக் கூறிப் பின்னரும் உலகவொழுக்கத்தைத் தப்பி ஒருவன் தெருவின் கண்ணேநின்று கூறுங்கூற்றை உண்மையென்று கொண்டு அதன் உண்மையை உணராமாய் நாம் அதனைத் தெளிதல் எளிதென்று சொல்லக்கடவேமென்றாள்; எ - று. நாமென்றது உயர்த்துக்கூறியது. உளப்பாடுமாம். ஒருவன் (2) சாமா றெளிதென்பா மற்று |
எ - து; அதுகேட்ட தோழி பின்னை நின்கருத்து இதுவாயின் ஒருவன் சாந்தன்மை எளிதென்று கூறக்கடவேமென்றாள்; எ - று. என்பாம், உளப்பாடு.
1. தொல். பொருளி. சூ. 1. இச்சூத்திரத்திற் கூறியது, ‘இயலா’ என்றதனால்,’என் செய்வாமென்றி வழிப் பொன் செய்வா மென்றார்போல வினாவிற் பயவாது இறைபயந்தாற் போல நிற்பனவுங்கொள்க’ என்பது. 2. (அ) ”ஈத லிரந்தார்க்கொன் றாற்றது வாழ்தலிற், சாதலுங் கூடுமா மற்று” கலி. 61 : 2. (ஆ) ”பகையகத்துச் சாவா ரெளியர்” குறள். 723. (இ) ”சாவ தெளிதரிது சான்றாண்மை” ஏலாதி. 40. (பிரதிபேதம்)1இன்னோவைத் தீாத்தற்கு, 2அரிதென்று நின்முகங்கொண்டல்காரண, 3பிறந்தவளை. 4மருந்தாகற். ணின்மருந்த. 5திருந்திழாய் நாம், 6காணிஙனமருந்தின் னென்றது, 7அடக்கினோம் 8பண்புணராத்தேறல்.
|