பக்கம் எண் :

368கலித்தொகை

28சிறிதாங்கே, மாணாவூ ரம்ப லலரி 1னலர்கென
நாணு நிறையு நயப்பில் பிறப்பிலி
பூணாக நோக்கி யிமையா னயந்துநங்
கேண்மை விருப்புற் றவனை யெதிர்நின்று
(1) நாணடப் பெயர்த்த நயவர வின்றே.

எ - து: அதுகேட்ட தலைவி மாட்சிமைப்படாத இவ்வூரில் 2அம்பல் இனி (2) அலரினாலே அலர்வதாக வென்று கருதி நாணையும் நிறையையும் விரும்புதலில்லாத, குடிப்பிறப்பிற்குரிய ஒழுக்கம் 3நெஞ்சிலில்லாதவனுக்கு அவன் இறந்துபடுமென்று கூறுகின்ற அத்தன்மையே மிக இன்று காணென்றாள். அது கேட்ட தோழி நின் பூணாகத்திற் புணர்ச்சியை மனத்தாற் கருதி இரவுந்துயில்கொள்ளானாய் நங் கேண்மையை 4நயந்து நம்மை விருப்புற்றவனை நாண் அடுகையினாலே எதிர்நின்று மீட்ட நயப்பாடு 5வருதலின்று, அதற்குத்தக்கது அறிவாயென்றாள்; எ - று.

“சினனே பேதைமை நிம்பிரி 6நல்குர, வனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே” (3)என்பதனான் ‘நாணுநிறையு நயப்பில் பிறப்பிலி' எனச்சினம்பற்றி 7வரினும் அஃது அவன்காதலைச்சிறப்பித்துவருதலின்அமைந்தது. பிறப்பிலி, பெயர்மாத்திரையாய் இல்லாதவென்னும் பெயரெச்சமறைக்கு முடிவாய் நின்றது. பிறப்பிலிக்கு ஆங்கே சிறிதென மாறிப் பொருளுரைக்க.

ஆங்கேயென்ற ஏகாரம், தேற்றம்.

“உயர்மொழிக் குரிய வுறழுங் கிளவி” (4) என்றதனால், தலைவி உறழ்ந்து கூறினாள்.

இதனால், தலைவிக்கு விருப்பமுற்று நினைத்தல்பிறந்தது.

இது தரவும் தளைவிரவி ஐஞ்சீரடி[யும்] வந்த நெடுவெண்பாட்டும் ஐஞ்சீரடுக்கிய குறுவெண்பாட்டும் இடையே முச்சீரடிவந்த கொச்சகமும் வெண்பாவும் தனிச்சொல்லும் குறுவெண்பாட்டும் ஓரடியானொன்றும் ஐஞ்சீரடி


1. “நாணடப் பெயர்த்தல்” கலி. 47 : 20.

2. (அ) “அலரெழ வாருயிர் நிற்கும்” (ஆ) “கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற், றவ்வென்னுந் தன்மை யிழந்து” (இ) “காமம், வெளிப்படுந் தோறு மினிது” குறள் 1141, 1144, 1145.

3. தொல், பொருளி. சூ, 51. இச்சூத்திர வுரையிலும் இப்பகுதி மேற்கோளாக இக்குறிப்பு எழுதப்பெற்றுள்ளது.

4. தொல். பொருளி. சூ. 44. இதன் பக்கம் 364 : 4 - ஆம் குறிப்புப் பார்க்க.

(பிரதிபேதம்)1அலர்க்கென, 2அம்பலினாத லரினாலே, 3நெஞ்சில்லாத வனுக்கு., 4நயந்து விருப்புற்றவனை., 5வருதலினதற்கு, 6நல்குரவெனநால், 7வரினுவலனன் காதலைசிறப்பித்தலினிதுவமைந்தது.