மெள்ளி நகினும் வரூஉ மிடையிடைக் கள்வர்போ னோக்கினு நோக்குங் குறித்தது கொள்ளாது போகாக் குணனுடைய னெந்தைதன் னுள்ளங் குறைபடா வாறு. |
இது தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி அவனோடு உறழ்ந்து சொல்லி அவனது நீக்கத்துக்கண் அவன்குறை 1மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலை மகளைக் குறைநயப்பித்தது. இதன் பொருள். (1)எல்லா (2) விஃதொத்த னென்பெறான் கேட்டைக்காண் (3)செல்வங் கடைகொளச் சாஅய்ச் (4) சான்றவ ரல்லல் களைதக்க கேளி ருழைச்சென்று (5)சொல்லுத லுற்றுரைக் கல்லா தவர்போலப் (6) 2பல்லூழ் பெயர்ந்தென்னை நோக்குமற் றியானோக்கின் மெல்ல விறைஞ்சுந் தலை |
1. (அ) “எல்லாவிஃதொத்தனென்பெறான் கேட்டைக்காண்” என்பது எல்லா வென்பது பெண்பான் மேல்வந்ததற்கும் (தொல். பொருளி. சூ. 24. 'முறைப்பெயர்' இளம்;) (ஆ) “எல்லா விஃதொத்தன்” என்பது இடைக்குறையாகிய ஒத்தன் என்பது ஒருத்தன் எனக் குறிப்பானறியவந்ததற்கும் (நன். பெயரி. சூ. 12. மயிலை) மேற்கோள். 2. “இஃதொத்தன்” (கலி. 64 : 8) என்பதன் குறிப்புப்பார்க்க. 3. “நல் கூர்ந்துஞ் செல்வ ரிரவாதார்” நாலடி. 270. 4. “புனத்தே வருவர்நல் லோர்குறை போலப் புகலவொன்று, மனத்தே யெழுஞ் சொல்ல மாட்டார் வருந்துவர் வண்டழைகொண், டினத்தே பிரிந்த கலைவின வாநிற்ப ஈங்கிவர்தா, நினைத்தே யுழல்கின்ற தென்னறி யேனொன்று நேரிழையே” அம்பிகா. 88. 5. “கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார்” (குறள். 1053) என்புழி, கடனறிதலென்பதற்கு மானமறிதலென்று பொருளிசைத்து, 'அதனையறிதல் - சொல்லுத லுற்றுரைக்கதலாகாமைக் கேதுவாய அதனியல்பினை யறிதல்' என இச்சொற்றொடரை முதற்சார்த்தி விளக்கமெழுதியிருத்தல் இங்கே அறிதற்பாலது. 6. (அ) “கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம்” (ஆ) “நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள், யாப்பினு ளட்டிய நீர்” (இ) “யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற், றானோக்கி மெல்ல நகும்” குறள். 1092..1093. 1094. (ஈ) “தன்னையான் முகத்தை நோக்கிற்றான் முலை முகத்தை நோக்கும்” சீவக. 1626. (பிரதிபேதம்)1மறாமற்கேற்பன, 2பல்லூழ்ப்பெயர்ந்து.
|