எ - து: ஏடீ ! இவனொருத்தன் என்குறைபெறாதவன்? 1இவன் கேட்டைப் பாராய்; (1) அறிவுடையோர் தம்முடைய செல்வம் முடிவை அடைகை யினாலே மிடித்துத் தம்முடையவருத்தத்தைக் களைதல்தக்க (2) உறவானவ ரிடத்தே சென்று தங்குறையை அவர்க்கு வாய்விட்டுச் சொல்லத்தொடங்கிப் பின்னை அதனை முடியச் சொல்லமாட்டாதிருப்பாரைப்போலத் தான் (3) கூறக் கருதியதனைக் கைவிட்டு என்னைப் பலமுறையாகப் பார்க்கும்; 2பின்னையான் தன்னைப்பார்க்கின் தான் மெத்தெனத் தலையிறைஞ்சி 3நிற்கும்; எ - று. இது தலைவன் தம்மிடத்து வருகின்றமைகண்டு தலைவிக்குக்கூறிப் பின்னர் அவனெதிர்சென்று அவனை 4நோக்கிக் கூறுகின்றாள். 7 | (4) 5எல்லாநீ, முன்னத்தா னொன்று குறித்தாய்போற்காட்டினை (5) நின்னின் விடாஅ (6) நிழற்போற் றிரிதருவா யென்னீ 6பெறாததீ தென் |
எ - து: ஏடா ! நீ குறிப்பாலே எம்மோடு ஓர் நட்புச்செய்யக் குறித்தாய் போல எமக்கு அறிவித்தாயாய் நின்னைவிட்டு நீங்காத நிழற்போல என்னை விட்டுநீங்காமற்றிரி தருகின்றவனே! நீ பெறாத குறை 7யாது? அதனை இது வென்று 8கூறு; எ - று. இது குறையுறவுணர்தல்.
1. “இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னுந், திண்மையுண் டாகப் பெறின்” குறள். 188. 2. (அ) “செழுங்கேளிர் நிழல்சேர”..................... (ஆ) “பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல், சுற்றத்தார் கண்ணே யுள” குறள். 521. 3. “கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக், கரந்த காமம்” அகம் 198. 4. (அ) ”எல்லாநீ........................பெறாததீ தென்” என்பது தோழிதலைவனை விளித்துக்கூறலின் வழுவாய் அமைந்தது” என்பர், நச். (தொல். பொருளி. சூ. 26.) (ஆ) விளியேற்குமென எடுத்தோதாதனவற்றுள் இருபாற்கும் பொதுவாகிய ஆகார வீறாகிய எல்லாவென்பது ஏடா வென்னும் பொருளில் வருதற்கு “எல்லாநீ முன்னத்தா னொன்று குறித்தாய்போற்காட்டினை” என்பது மேற். தொல். விளி. சூ. 12. நச். 5. “நின்னின் விடாஅ..................பெறாததீதென்” என்பது குறையுற வுணர்தற்கு மேற்கோள்; தொல். களவு. சூ. 36. நச். 6. “நிழறன்னை, வீயா தடியுறைந் தற்று” குறள். 208. (பிரதிபேதம்)1இவனுடையகேட்டை, 2பின்யான், 3நிற்குமெனத் தோழி தலைவியை நோக்கிக்கூறினாள் இது, 4நோக்கி மேற்கூறுகின்றாளென்று கொள்க, 5ஏடாநீ, 6பெறாததிதென், 7யாதுதான் அதனை, 8கூறென்றாள்.
|