10 | சொல்லின், மறாதீவாண் மன்னோ விவள் |
எ - து: 1யான் என் குறையைச்சொல்லின் இவள் மிகவும் மறாதிருப்பாளோ ; 2எ - று. இது தலைவன் தன் நெஞ்சோடுசாவினது. “ஐயக் கிளவி யாடூஉவிற் குரித்தே” (1) என்பதனான் ஐயக்கிளவி தலைவற்குரித்தாய் வந்தது. மறாதீவாள், வினைத்திரிசொல். ஓகாரம், வினா. 11 (2)செறாஅது, (3) ஈத லிரந்தார்க்கொன் றாற்றாது வாழ்தலிற் சாதலுங் கூடுமா மற்று எ - து: அங்ஙனம் உசாவித் தம்பால் இரந்தவர்களுக்கு 3யாதானு மொன்றைமுகமாறாது ஈதலைநடத்தாது உயிர் 4வாழலிற் பின்னைச்சாதலுங்கூடு மென்றான் ; எ - று 13 (4)இவடந்தை, காதலின் யார்க்குங் கொடுக்கும் விழுப்பொருள் யாதுநீ வேண்டி யது
1. தொல். பொருளி. சூ. 44. இச்சூத்திரவுரையில் இச்செய்திக்கே “சொல்லின்...................விவள்”என்பது மேற்கோள். 2. (அ) “உயர்ந்தேந்து மருப்பிற் கொல்களிறு பெறினுந், தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலெ னுவந்துநீ, யின்புற விடுதி யாயிற் சிறிது, குன்றியுங் கொள்வல்” (ஆ) அகனக வாரா முகனழி பரிசி, றாளி லாளர் வேளா ரல்லர்” (இ) “உண்ணெகிழ்ந் தீயிற் சிறிதெனினுங் குன்றுபோற் கூடும் பயன்” (ஈ) “இல்லார் மொழிந்தவை, மென்மொழியா லுண்ணெகிழ்ந் தீவானேல் விண்ணோரா, லின்மொழியா லேத்தப்படும்" (உ) "நகை முகமே நான்மலரா, வின்மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை, பலமா நலங்கனிந்த பண்புடையார்” 3. (அ) “இன்மை யுரைத்தார்க் கதுநிறைக்க லாற்றாக்காற், றன்மெய் துறப்பான் மலை” கலி. 43 : 26 - 27. (ஆ) “கருங்கட லுடுத்த மல்லன் ஞாலத்துச் செம்மையின் வழாஅது கொடைக் கடன் பூண்டு, வாழ்வது பொருந்தா தாகிற் சாவது மினிதவர் வீவது முறுமே” யா - வி. சூ. 53. (இ) “மள்கலில் பெருங்கொடை மருவி மண்ணுளோ, ருள்கிய பொருளெலா முதவி யற்றபோ, தெள்கலி லிரவலர்க் கீவ தின்மையால், வெள்கிய மாந்தரின்” கம்ப. கார்காலப் 103. 4. (அ) “காமஞ்சாலா விளமை யோள்வயின்” என்னும் சூத்திரவுரையில் “புல்லித்தோன்றுங் கைக்கிளையெனவே காமஞ்சான்ற இளமையோள் கண் நிகழுங்கைக்கிளை இத்துணைச் சிறப்பின்றாயிற்று; அஃது ‘எல் (பிரதிபேதம்)1அதுகேட்ட தலைவன்யான் , 2எனத் தன்னெஞ்சொடுசாவினான், இது “ஐயக் கிளவியாடவர்க்கு, 3யாதானுமொன்று முகமறாது, 4வாழ்தலின்.
|