எ - து: அது கேட்ட தோழி இவள் தந்தைஇரப்பார்மேலுள்ள 1காதலினால் இரவலர்யார்க்குஞ் சீரிய 2பொருள்களைக் கொடுக்கும், நீவேண்டியபொருள் 3யாதுதானென்றாள்; எ - று. இஃது “உயர்மொழிக் குரிய வுறழுங் கிளவி, யையக் கிளவியாடூஉவிற் குரித்தே” (1) என்பதனால், தோழி உறழ்ந்துகூறினாள். 15 | பேதாய பொருள்வேண்டும் புன்கண்மை யீண்டில்லை யாழ மருளி மடநோக்கி(2) னின்றோழி யென்னை யருளீயல் வேண்டுவல் யான் |
எ - து: அதுகேட்ட தலைவன் கூற்றின் குறிப்பறியாதவளே ! என்னிடத்துப் பொருளை இரக்கும் மிடியில்லை. மருண்டு மடப்பத்தையுடைத்
லாவிஃதொத்தன்' என்னுங் கலியுள் ‘இவடந்தை, காதலின்யார்க்குங்.....................வேண்டுவல்யான்” எனவரும். இது கைகோ ளிரண்டினுங் கூறத்தகாத வாய்பாட்டாற் கூறலிற் கைக்கிளை யென்றார். குறிப்பென்றதனாற் சொல்லியின்புறினும் தலைவன்றன் குறிப்புநிகழ்ந்தது புறத்தார்க்குப் புலனாகாதென்பதூஉம் அகத்து நிகழ்ச்சியறியும் மனைவியர்க்காயிற் புலனாமென்பதூஉம் கொள்க” என்பர் நச்; தொல். அகத். சூ. 50. (ஆ) “வைகல் வைக லைய விவ்வழிக,் கையுறையேந்தி னிர் வருதிர் மற்றஃ, தறிகலம் யாமெமக் குரைப்பிற், பெறுகுவி ரெந்தை பெருவண்மையனே” தமிழ்நெறி. மேற்கோள். (இ) “வேண்டுவ கொடுக்கும், போதல் வேண்டா பொருட்குறை வுண்டெனி, னேதமில்லை யிவணி ராமின்” பெருங். (3) 6 : 181 - 3. 1. தொல். பொருளி. சூ. 44. 'உயர்மொழிக்குரிய வுறழுங் கிளவி' என்புழி உறழ்ந்து கூறலை நால்வகைப்படுத்தி, “ஈத லிரந்தார்க்கொன்றாற்றா துவாழ்தலிற், சாதலுங் கூடுமாமற்று” எனத் தலைவன் கூறிய வழி, “இவடந்தை, காதலின் யார்க்குங் கொடுக்கும் விழுப்பொருள், யாதுநீ வேண்டியது” எனவும் "பேதாய் பொருள்வேண்டும்...................வேண்டுவல் யான்” எனத் தலைவன் கூறியவழி) "மண்டமரட்ட களிறன்னான் றன்னையொரு, பெண்டி ரருளக் கிடந்த தெவன்கொலோ” எனவும் தோழி உறழ்ந்து கூறினாளென்று கூறி, 'இஃது அவன் வருத்தத்தில் எதிர் கூறத்தகாதன கூறலின் வழுவாய்த் தலைவி கருத்தறிந்து உடம்படவேண்டுமென்று கருதுதலின் அமைந்தது' என்பர். நச். 2. “இருளுறழ் கூந்தலா ளென்னை, யருளுறச் செயினுமக் கறனுமா ரதுவே” கலி. 140 : 33 - 34. (பிரதிபேதம்)1காதலினால் யார்க்கும், 2பொருள்கள் கொடுக்கும், 3யாதுதானென்றாள் பேதாய்.
|