தாகிய நோக்கினையுடைய நின் தலைவி என்னை அருளுதலை யான் 1இரப்பே னென்றான்; எ - று. 18 அன்னையோ, எ - து: 2அத்தன்மையையோ? எ - று. இஃது அதுகேட்ட தோழி இவனிடத்துக் களவொழுக்கம் அறியாள் போன்றுகூறியது. (1) மண்டம ரட்ட களிறன்னான் றன்னையொரு (2) பெண்டி ரருளக் கிடந்த தெவன்கொலோ |
எ - து: 3மிக்குச் செல்கின்ற போரிலே பகைவரைக்கொன்ற களிறுபோல வான்றன்னை ஒரு மகளாயிருக்கின்றவள் அருளும்படியாகக் கிடந்த குறை எத்தன்மையதோதான்; 4எ - று. இதுதோழி தலைவன் நீங்கியபின்னர்த் தலைவியோடுசாவியது. 20 | ஒண்டொடீ, நாணிலன் மன்ற விவன் |
ஆயின் 5ஏஎ; 22 | (3) பல்லார்நக் கொள்ளப் படுமடன் மாவேறி மல்லலூ ராங்கட் படுமே நறுநுத |
1. “மண்டமர் முருக்குங் களிறனை யார்க்குப், பெண்டிர் கூறும் பேரறி வுண்டோ” மணி. 18 : 140 - 41. 2. பெண்டிரென்பத னீற்றிலுள்ள ‘இர்’ என்னு மிடைச்சொல் முன்னிலையிலன்றி ‘ர்’ ‘அர்’ என்பவைபோலப் படர்க்கைப் பன்மையிலும் வரும் விகுதிபோலும்; மகளிர், கேளிர், வேளிர், புத்தேளிர் முதலியவற்றில் இவ்விகுதி வருதலும் இச்சொல் “பெண்டிரும் வாழாரோ” (நாலடி 194) “பெண்டிராயிற் பிறர் நெஞ்சு புகாஅர்” (மணி. 22 : 44) “பெண்டிர் மதியார்” (வளையாபதி) எனப் பன்மைவினைபெற்று முடிதலும் இக்கருத்தை வலியுறுத்தும்; இங்கே இதனை, “பத்தினிப் பெண்டிர்” (மணி. 17 : 1) என்புழிப்போல ஒருமையில் மயங்கிவந்த தென்று கொள்க. 3. (அ) “மாவென மடலுமூர்ப பூவெனக், குவிமுகி ழெருக்கங் கண்ணி யுஞ் சூடுப, மறுகினார்க் கவும்படுப, பிறிதுமாகுப காமங்காழ்கொளினே” குறுந். 17. (ஆ) “மாவென் றுரைத்து மடலேறுப மன்று தோறும், பூவென் றெருக்கி னிணர்சூடுப புண்மை கொண்டே, பேயென் (பிரதிபேதம்)1இரப்பேனென்றான். இது உயர்மொழிக்குரிய வுறழுங்கிளவி ......................யுரித்தே என்பதனாற் றோழியுறழ்ந்து கூறினள் அன்னையோ, 2அதுகேட்ட தோழி அத்தன்மையோ வென்றிவனிடத்துக் களவொழுக்கமறியாள் போன்று கூறினாள் மண்டமரட்ட, 3அதுகேட்டுத் தலைவன் நீங்கிய பின்னர் மிக்குச் செல், 4எனத்தலைவியொடுசாவினாள், ஒண்டொடீ, 5 ஏஎ.
|