பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி375

னல்காள் (1) கண் மாறி விடினெனச் செல்வானா
மெள்ளி நகினும் வரூஉ மிடையிடைக்
(2) கள்வர்போ னோக்கினு நோக்குங் குறித்தது
கொள்ளாது போகாக் குணனுடைய னெந்தைதன்
னுள்ளங் குறைபடா வாறு

எ - து: 1ஒண்டொடீ! இவன் எந்தைதன் உள்ளங் குறைபடாதபடி வேண்டுவன 2கொடுத்துத் தான் குறித்ததொன்று கைப்பற்றாமற் போகாக் குணத்தையுடையன், அதனால் நீ அருளினுந் தாழ்வில்லை; அவன்றான் குறை யுற்றுநிற்கின்ற காலத்து யான் தன்னை இகழ்ந்து சிரித்தாலும் பலகாலும் வரும்; அக்குறையுறவுக்கு நடுவேநடுவே கள்வர் தாங்குறித்த 3பொருளை நோக்காது நோக்குமாறுபோல நின்னை மனநோக்காதுநோக்கும்; அதனான் இவனாயின் அறுதியாக ஏஎ ! 4நாணமிலன்.நாணமின்மையால் இவன் போகின்ற போக்குப்பலருஞ் சிரித்து இகழப்படு மடன்மா யான் ஏறும்படி நறிய நுதலினையுடையாள் அருளாளாய் அருளைமாறியேவிடின் அவளோடு என்னிடை நிகழ்ந்தது ஊரிடத்தே அலராமேயெனக் கருதிச்செல்வான் 5போலே யிருந்தது; எ - று.

இஃது உசாவியபின், தோழி அவளை நோக்கி, மேல் இதற்குத்தக்கது நீ அறிந்து செய்யெனக் குறைநயப்பித்தது.

(3) எள்ளிநகினும் வருமென்றது தன் கண்நிகழ்ந்த எள்ளல்பொருளாகநகை பிறந்தது. ஏறி, ஏற. (4) எந்தைஎன்றது, தலைவி தந்தையை. நோக்கினுமென்றது


றெழுந்து பிறரார்ப்பவு நிற்ப காம, நோய்நன் கெழுந்து நனிகாழ் கொள்வ தாயினக்கால்” வளையாபதி.

1. (அ) ”பிறனைக், கொலையொக்குங் கொண்டுகண் மாறல்” நான். 8. (ஆ) “கொண்டுகண் மாறல் கொடுமையிற் றுவ்வாது” முது. 37. (இ) “கண்மாறி நீங்கினன்” மணி. 3 : 46 - 41.

2. வினைபயன் மெய்யுரு வுவமை கட்குரிய வென்று பாகுபடுக்கப்பட்ட உவமச்சொற்களன்றி மரபான் வருவனவு முண்டென்பதற்கு, ‘கள்வர் போனோக்கினு நோக்கும்’ என்பது மேற்கோள்; தொல். உவமை. சூ. 17. இளம்.

3. தொல். மெய்ப். சூ. 4. பேர். உரையிலும் இப்பகுதி இதற்கே மேற்.

4. “அன்னை யென்னை யென்றலு முளவே” என்புழி உம்மையாற் பிறவுமுளவென்றுகூறி, தோழி தலைவிதந்தையை எந்தை யென்றுகூறியதற்கு ‘எந்தைதன், னுள்ளங் குறைபடா வாறு’ என்பதை மேற்கோள் காட்டுவர் நச்; தொல். பொருளி. சூ. 52.

(பிரதிபேதம்)1உசாவியபின்னும் அவளைநோக்கி ஒண்டொடீ, 2கொடுத்துய்த்தான் குறித்த, 3பொருளை நோக்குமாறு, 4நாணமிலன் இந்நாணமின்மையால் இவன், 5போல விருந்ததுமேல் இதற்குத்தக்கது நீயறிந்துசெய் யெனக் குறைநயப்பித்தாள் எள்ளி.