பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி377

இஃது “ஏறிய மடற்றிறம்” என்னும் (1) சூத்திரத்து மிக்க காமத்து மிடலென்றதனால், தலைவனுந் தலைவியும் உறழ்ந்துகூறித் தலைவி கூடக் கருதிய பெருந்திணை.

இதன் பொருள்.

(2)ஏஎ யிஃதொத்த னாணிலன் றன்னொடு
மேவே 1மென் பாரையு மேவினன் கைப்பற்று
மேவினு மேவாக் கடையு மஃதெல்லா
நீயறிதி யானஃ தறிகல்லேன் (3) பூவமன்ற
5மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய் நின்னையான்
புல்லினி தாகலிற் புல்லினெ (4) 2னெல்லா
தமக்கினி் தென்று வலிதிற் (5) பிறர்க்கின்னா
செய்வது நன்றாமோ மற்று

1. தொல். அகத். சூ. 51. இச்சூத்திரத்தின் நச்சினார்க்கினியருரையில் “ஏஎ இஃதொத்தன்............................நன்றாமோ மற்று” என்பது மிக்க காமத்து மிடலுக்கு மேற்கோள்.

2. (அ) ஏஎ இஃதொத்த னாணிலன்றன்னொடு” என்பது ஏஎ யென்பது இசைநிறையாய் வந்ததற்கு மேற்கோள்; தொல். இடை. சூ. 24. நச். இ-வி. சூ. 278. (ஆ) செறற் சொலென்பது செறலினாற் கூறுஞ்சொல் என்று கூறி, ‘ஏஎ யிஃதொத்தன்’ என்றவழி இஃதென்பது செறல் பற்றி வந்ததென்றும் (தொல். கிளவி. சூ. 55. ‘குடிமை’)
(இ) ஈரள பிசைக்கு மிறுதியிலுயிர் அளபெடை பெற்றுவருங் காலத்திற் பொருள்வேறுபடுமென்றுகூறுழி ஏ, அளபெடுத்துவருதற்கு “ஏஎ இஃதொத்தன்” என்பதை மேற்கோள்காட்டி ஏஎ இகழ்ச்சியை யுணர்த்திற்றென்றும் (தொல். இடை. சூ. 32. ‘ஈரளபு’) கூறுவர்; தெய். (ஈ) "ஏஎ இசைநிறையாய் வந்ததற்கு, சேனாவரையர் உரையிற் காணப்படும். “ஏஎ இஃதொத்தனென்பெறான் கேட்டைக்காண்” என்பதில் பின் இரு சீரும் கலி. 61-ம் பாடலில் உள்ளவை; எழுதுவோரால் மயங்கிச் சேர்த்தெழுதப்பட்டனபோலும்; தொல். இடை. சூ. 24.

3. “பூவமன் றன்று சுனையு மன்று” கலி. 55 : 12.

4. எல்லா வென்பது ஆண்பான்மேல் வருதற்கு “எல்லா.......................மற்று” என்பது மேற்கோள்; தொல். பொருளி. சூ. 24. ‘முறைப்பெயர்’ இளம்.

5. (அ) “பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா, பிற்பகற் றாமே வரும்” குறள் 316. (ஆ) “பிறர்க்கின்னா செய்தலிற் பேதைமை யில்லை” அறநெறி. 95.

(பிரதிபேதம்)1என்பாரைமேனினன், 2எல்லாந்தமக்கினி.