பக்கம் எண் :

378கலித்தொகை

எ - து: 1இவனொருத்தன் தன்னோடு புணர்ச்சிக்குறிப்பின்றி நிற்பாரையும் தான் புணர்ச்சிக்குறிப்புடையனாய்க் கையாலே வலிதிற் பிடித்துக்கொள்ளும், ஆதலால் ஏஎ நாணிலனாயிருந்தானெனத் தலைவி கூறினாள்; அதுகேட்ட தலைவன் அப்புணர்ச்சிக்குறிப்பினது பகுதியாகிய மெய்ப்பாடெல்லாம் நின்னிடத்துப் பொருந்துதலைச் செய்யினும் பொருந்தாத இடத்திலுமுள்ள நன்று தீது நீ அறியக்கடவை; யான் புணர்ச்சிக்குறிப்பை அறிதலைச் 2செய்யேன்; பூ நெருங்கின மெல்லிய கொத்துநீங்காத கொடியையொப்பாய் ! நின் மேனி புல்லுதற்கு இனிதாயிருக்கையினாலே நின்னை யான் புல்லினேனென்றான். அது கேட்ட தலைவி ஏடா! தமக்கு இனிதாயிருக்குமென்று கருதிப் பிறர்க்கு இன்னாதனவற்றை வலிதிற் 3செய்வது இன்பத்தைத் தருமோ வென்றாள்; எ - று.

ஏஎ, இகழ்ச்சிக்குறிப்பு.

இது “வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தன், 4மரீஇய மருங்கி னுரித்தென மொழிப” (1) என்பதனான் அடியோன் தலைவனாயவழித் தலைவி வேட்கைமறுத்து உரைத்தது.

(9). 5சுடர்த்தொடீ, (2) போற்றாய்களை நின்முதுக்குறைமை போற்றிக்
வேட்டார்க் கினிதாயி 6னல்லது நீர்க்கினிதென் [கேள்
றுண்பவோ நீருண் பவர்;
12செய்வ தறிகல்லேன் யாதுசெய் வேன்கொலோ
(3) வைவா யரவி 7னிடைப்பட்டு நைவாரா

1. தொல். பொருளி, சூ. 17. இச்சூத்திரத்தின் நச்சினார்க்கினியருரையில் “தமக்கினி தென்று...................மற்று”
என்பது இச்செய்திக்கே மேற்.

2. “போற்றாய்.................நீருண்பவர்” என்பது தீக்காமம் இழிந்தோர்க் குரிமையின் அடியோர் தலைவராய்வந்த கைக்கிளை என்பது, தொல். அகத். சூ. 23 இவருரையிற் காணப்படுகின்றது. இந்நூற்பக்கம் 380 : 2 (அ) குறிப்புப்பார்த்தால் இஃது இளம்பூரணர் கருத்தை மறுத்த தென்பது விளங்கும். இதற்கு மாறாக இச்செய்யுளின் உரை முதலிறுதிகளில் இதுபெருந்திணையென்றுள்ளது. இவைஆராய்தற்பாலன.

3. ஐவாயரவு: (அ) “ஐவா யரவுற்ற தன்னவின் னாவிட ராற்றியென்போ, லெவ்வா றிருந்திர்நீ ரெல்வளையீர்” தஞ்சை. 258. (ஆ) “ஐவாய் வயநாகம்” களவழி. 26. (இ) “வருவரையு, ளைவாய நாகம்” திணைமாலை. 13. (1) (ஈ) “ஐவாயரவி னவிராரழல் போன்று சீறி” சீவக. 2345. (உ) “ஐந்தலை நாக மழல வெகுட்டி” பெருங். (2) 8 : 29. (ஊ) “ஐந்தலையரவு தன்வா யைந்துடன் கவர்ந்தநஞ்சிற், றுன்பமோர் கடிகையல்லாற் றுஞ்சினாற் றொடர்ந்தி டாவாம்” மேரு. 138.

(பிரதிபேதம்)1ஏஎ இகழ்ச்சிக்குறிப்புஇவனொரு. 2செய்யேன்;முகைநெருங்கின. 3செய்தது இன்பத்தைத் தருமோரென்றாள் இது 4மரீமருங்கின் 5சுடர்த்தொடீஇ. 6அல்லதை. 7இடைப்பாடு