பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி379

(1) மையின் மதியின் விளங்கு முகத்தாரை
1வௌவிக் கொளலு மறனெனக் 2கண்டன்று

எ - து: அதுகேட்ட தலைவன் சுடர்த்தொடீ ! நின் முதுமைக்கண் உறைகின்ற நிலைமை ஈண்டுப் போற்றாது கைவிடு; யான் கூறுகின்றதனைப் பேணிக்கேள்; நீருண்பார்சிலர் தண்ணீரை விரும்பினர்க்கு அஃது இனிதாயின் உண்ணுமதல்லது 3அந்நீர்க்கு இனிதாயிருக்குமென்று கருதி உண்பரோ உண்ணார் காணென்றான்; என்று பின்னும் ஐந்துவாயினையுடைய பாம்பினது பார்வையிலே அகப்பட்டு வருத்தம்வந்து மேற்செய்யுங் காரியம் அறிகல்லேன்; இனி யாதுசெய்வேன்கொல்லென நெஞ்சொடுகிளந்து, மறுவில்லாத மதிபோல விளங்கும் முகத்தினையுடைய மகளிரை வலிதிற்புணர்தலும் (2) ஒரு மணமென (3) நூல்கண்டதெனத் துணிந்துகூறினான்; எ - று.

ஐவாயரவென்றது தலைவியை.

16 அறனு மதுகண்டற் றாயிற் றிறனின்றிக்
கூறுஞ்சொற் கேளா னலிதரும் (4) பண்டுநாம்

(எ) “ஐந்தலை நாக மகன்முழை கண்டஞ்சுமன்று” திருவாவடுதுறைக் கோவை. 190.

1. “அவிர் மதிக்குப் போல, மறுவுண்டோ மாதர் முகத்து” குறள். 1117.

2. (அ) ஒருமண மென்றது இராக்கத மணத்தை; அஃது: ஒருதலைவன் ஒரு தலைவியை அவளானும் அவளுடைய தமரானுமன்றி வலிதிற்பெறுதல். (ஆ) “மலிபொற்பைம் பூணாளை மாலுற்ற மைந்தர், வலிதிற் கொண் டாள்வதே யென்ப - வலிதிற், பராக்கதஞ் செய்துழலும் பாழி நிமிர்தோ, ளிராக்கதத்தார் மன்ற லியல்பு” தொல். கள. சூ. 1. மேற்கோள். (இ) “மாதர் தங்களை வன்மையிற் பற்றுத லரக்கர், நீதி” பேரூர். முசுகுந்தன். 31.

3. நூலென்றது வேதத்தை; “மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள்” (தொல். கள. சூ. 1.) “அந்தண ரருமறை மன்ற லெட்டனுள்” (இறை. சூ.1.) என்பவையும் அவற்றினுரையும் பார்க்க.

4. (அ) “பண்டுநாம்...................நமக்கு” இது மறுத்தெதிர்கோடற்கு மேற்கோள். நாற்கவி. சூ. 127. (ஆ) “ஒன்றி யுயர்ந்த பால தாணையி, னொத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப” (தொல். களவியல். சூ. 2. நச்) என்பதும் அதன் உரையும் (இ) “விளியுமெ னின்னுயிர் வேறல்ல மென்பா, ரளியின்மை யாற்ற நினைந்து” (குறள். 1209,) என்பதும் அதன் பரிமேல். உரையும் (ஈ) “திட்டி விடமுண நின்னுயிர் போநாட், கட்டழ லீமத் தென்னுயிர் சுட்டே, னுவவன மருங்கினின் பாலுள்ளந்,

(பிரதிபேதம்)1வைஇக்கொளலும், 2காண்டன்று கொண்டன்று, 3அந்நீர் இனிதாயிருக்கும்.