பக்கம் எண் :

380கலித்தொகை

வேறல்ல மென்பதொன் றுண்டா லவனொடு
மாறுண்டோ நெஞ்சே நமக்கு

எ - து: அதுகேட்ட தலைவி நூல் உயர்ந்த மணத்தைக்கூறப்பட்டு (1) உலக ஒழுக்கமும் அத்தன்மைத்தாயிருக்குமாயின், அவனும் யான் மறுத்துக்கூறுஞ் சொல்லைக் கொள்ளாது திறனன்றி நலியுமாயின், அவையேயன்றி அவன் மனத்து முற்பிறப்பில் யானும் அவளும் வேறல்லமென்பதொன்று அவனிடத்துண்டாயிருக்குமாயின், நெஞ்சே அவனோடு நமக்கு இனி மாறுபாடுண்டோவெனப் புணர்ச்சிக்கு உடம்பட்டுக்கூறினாள்; எ - று.

அறனுமதுகண்டற்றென்பது ஆங்குநெஞ்சழிதல். தான்மறுத்துரைப்பவும் தன்மேல் அவன் விருப்பஞ்செய்தமை கண்டு பண்டு நாம் வேறல்லமென்பதொன்று அவனிடத்துண்டாலென்றாள். (2) இது தீதாமாதலான் அடியோர் தலைவராக வந்த பெருந்திணை.


தவிர்விலே னாதலிற் றலைமக டோன்றி” (உ) “நினக்கிவன் மகனாத் தோன்றிய தூஉ, மனக்கினி யாற்குநீ மகளாய தூஉம், பண்டும் பண்டும் பல்பிறப் புளவாற், கண்ட பிறவியே யல்ல காரிகை” மணி. 21 : 11 - 14. 29 - 32. என்பவைகளும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலன.

1. (அ) “விட்டுவிளங்கு மணிமுடியாய் வேதஞ்சொன்ன பிரமாதி, யெட்டு மணத்தி லொருமணமா மரக்கர்குலத்தி னியல்பறிவை, கட்டுமரிய காவலையுங் கலக்கிப் புக்குக் கன்னியரை, முட்டி யவரைக் கொடு போந்து வேட்கை முறையே யென மொழிந்தாள்” இராமா. திக்குவிசயப். 138. (ஆ) “கையின் மாலை யிவற்கெனக் கன்னியர், வெய்ய நெஞ்சொடு மின்னென வந்தவர், வைய மன்னன் வயநிலைநோக்கியே, யையமுற்றன ரன்புறு காதலார் ;- - ஏனை வேந்த ரெதிரிவரைப்பெருந், தானை சூழ்மணிச் சந்தனத் தேற்றியே, சோனை மாமதஞ் சோருங் கடதட, யானை யென்ன விளவலொ டேகினான்;- முறையினாலன்றி மொய்ம்பிற் கவர்வதெக் குறையினாலெனக் கோக்குலங் கூடிவந், திறைவ னோடெதி ரேற்றலில் வீரரைப், பிறைமுகக்கணை யாற்பிளந் தோட்டினான்; ...................அம்பிகைக்கு மம் பாலிகைக்கும்பதி, யெம்பி யேயெழி லாலென் றிசைவுறத,் தம்பி தன்னைத் தனஞ்சயன் றன்னெதிர், வம்பினான்மிகு மாமணஞ் சேர்த்தினான்” வில்லி. குருகுல. 123 - 128. (இ) “சூழ்படை கிழியத்தெய்வச் சுடர்மணிப் பொலந்தேர் தூண்டி, யாழ்கட லவனியாளு மரசருங்காண வாங்குப், போழ்படு திங்களன்ன புதுநிலாக் கற்றைதூற்றும், காழிள முலையினாளைக் கவர்ந்தனன் கமலக் கண்ணன் ......................ஆழிதரு மின்னமுத மன்னவளை வேட்டான்” பாக. (10) உருக்குமிணி மணத்திற முரைத்த. 52 - 73.

2. (அ) ”எவன் மரபின்” என்னும் சூத்திரவுரையில் இச்செய்யுளை மேற்கோள் காட்டி இதனுள் வௌவிக் கொளலு மறனெனக் கண்டன்று