பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி381

இதனால் இருவர்க்கும் புணர்ச்சியுவகை பிறந்தது.

இது தளைவிரவின நெடுவெண்பாட்டும் ஐஞ்சீரடுக்கிய குறுவெண்பாட்டும் கொச்சகமும் வெள்ளைச் 1சுரிதகமும் பெற்று வந்த கொச்சகக்கலி. (26)

(63).நோக்குங்கானோக்கித் தொழூஉம் பிறர்காண்பார்
தூக்கிலிதூற்றும் பழியெனக் கைகவித்துப்
போக்குங்காற் போக்கு நினைந்திருக்கு மற்றுநாங்
காக்கு மிடமன் றினி;
எல்லாவெவன்செய்வாம்;
6பூக்குழாய்செல்ல லவனுழைக் கூஉய்க்கூஉய்
விரும்பியான் விட்டேனும் போல்வலென் றோண்மேற்
கரும்பெழுது தொய்யிற்குச் செல்வலீங் காக
விருந்தாயோ வென்றாங் கிற;
10அவனின்,திருந்தடி மேல்வீழ்ந் திரக்குநோய் தீர்க்கு
மருந்துநீயாகுத லான்;
12இன்னும்,கடம்பூண் டொருகானீ வந்தை யுடம்பட்டா
ளென்னாமையென்மெய் தொடு;
14இஃதோவடங்கக்கேள;்
நின்னொடு சூழுங்கா னீயு நிலங்கிளையா
வென்னொடுநிற்ற லெளிதன்றோ மற்றவன்
றன்னொடு நின்று விடு.

இது தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி அவனிலைமை தலைமகட்குக் கூறி அவளுரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து இவ்வகையான தலைவற்குக் கூறெனஅவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது.

இதன் பொருள்.


எனவும் ‘நீர்க்கினிதென் றுண்பவோ நீருண்பவர்’ எனவும் தலைமகன் கூறுதலானும் தலைமகள் முனிந்துரைத்தலானும் ஊடியுணர்வாள் போல அரிதாகத் தலைமகளுடன் பட்டமையானும் இஃது உயர்ந்தோர் மாட்டுவந்த கைக்கிளை என்பர், இளம்; தொல். அகத். சூ. 26. (ஆ) அகப்புறக் கைக்கிளை தலைமைப்பாடில்லாதவர்க் குரித்தாய்வந்ததற்கு நாற்கவி. உரைகாரரும் (நாற்கவி. சூ. 242.) (இ) மிக்க காமத்து மிடலுக்கு இ - வி. உரைகாரரும் (இ - வி. சூ. 591) மேற்கோள்காட்டுவர்

(பிரதிபேதம்)1சுரிதகமும் வந்த.