பக்கம் எண் :

382கலித்தொகை

1நோக்குங்கா னோக்கித் தொழூஉம் பிறர் 2காண்பார்
தூக்கிலி தூற்றும் பழியெனக் (2) கைகவித்துப்
போக்குங்காற் போக்கு நினைந்திருக்கு மற்றுநாங்
காக்கு மிடமன் றினி;
எல்லா வெவன் 3செய்வாம்

எ-து: தான் தொழுகின்ற தன்மையைப் பிறர் காண்பாராக மனத்தாற்றூக்குதல் இல்லாதவன் (3)நாம்பார்க்குங்கால் நம்மைநோக்கித் தொழாநிற்கும்; இங்ஙனந் தொழுது நமக்குப் பழியைத்தூற்றுமென்று கருதித் தொழுதலை விலக்கிப் போகவிடுங் காலத்து அப்போக்குத் தனக்குச் செய்யும் வருத்தத்தை நினைத்துப் போகாதிருக்கும்; ஆதலால் இனி நாம் அவனை நம்பால் வாராமற் காக்குங் (4) காலமன்று, 4பின்னன ஏடீ! இங்ஙனங்காத்தற்கு அரிதானநிலைமை கண்டு மேல் என்செய்யக்கடவேங் கூறாய் ; 5எ - று.

அது கேட்ட தலைவி அதற்கு மறுமொழிகொடாது உடம்பட்டமை குறிப்பான் உணர்ந்தமையிற் பின்னுந் தோழி கூறுகின்றாள்.

6 பூக்குழாய் செல்ல லவனுழைக் கூஉய்க்கூஉய்
விரும்பியான் விட்டேனும் போல்வலென் (5) றோண்மேற்

1. “நோக்குங்கா னோக்கித்.......................எவன் செய்வாம்” என்பது நாண மிக்கவழித்தோழியொடு உசாவியதற்கு மேற்கோள்; தொல். கள சூ. 20. இளம்.

2. (அ) “கைகவிதேறல்” பொருந. 157 - 8. (ஆ) ”தோழியைக் கைகவியா” கலி. 42. 29 (இ) “கைகவி நறுநெய்” சீவக. 400.

3. “குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமரனை” மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், காப்பு. 4.

4. இடமென்பது காலமென்னும் பொருளில் வருதலை இடையென்பது, அப்பொருளில் பயின்று வருதலான் உய்த்துணர்க; புறம். 54: 2; மணி. 4: 98; சீவக. 1975. இல்வழி யென்பதற்கு இல்லாத காலத்தே யென்று; பொருள் கூறி ‘இடப்பொருள் காலத்தோடு மயங்கிற்று’ (சிலப். 4: 11.) என அடியார்க்கு நல்லாரெழுதி யிருத்தலும் இங்கே அறிதற்பாலது.

5. (அ) நற்றோ ளிழைத்த கரும்புக்கு” (ஆ) “தெரிவேய்த்தோட் கரும்பெழுதி” (இ) “நடாஅக் கரும்பமன்ற தோளாரை” (ஈ) “அன்றுதானீர்த்த கரும்பணி வாடவென், மென்றோண் ஞெகிழ்த்தான்றுறை” (உ) “நெடுமென்றோட், பெய்கரும் பீர்க்கவும் வல்லன்” கலி. 64 : 19

(பிரதிபேதம்)1நோக்கினால், 2காண்பான், 3செய்வாநாம், 4பின்னை இங்ஙனம், 5என்றாள் பூக்குழாய்.