பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி383

கரும்பெழுது தொய்யிற்குச் செல்வலீங் காக
1விருந்தாயோ வென்றாங் கிற;
10.அவனின், திருந் (1) தடி மேல்வீழ்ந் திரக்கு (2) நோய் தீர்க்கு
மருந்துநீ யாகுத லான்

2எ - து: பூங்குழையினையுடையாய்! வருத்தத்தையுடைய அவனிடத்துநீ கூடுங்கூட்டத்தை யான் விரும்பி நின்னைப் பலகாலும் அழைத்தழைத்துக் கொண்டுபோய் விட்டேன்போலேயுமிருப்பேன், அவற்கு அது தோன்றாதபடி யான் அவனிடத்தே(3)நீஎன் தோண்மேற்கரும்பாகஎழுதுங்குழம்பிற்கென்று செல்வன், நீ ஆண்டு வந்து இவ்விடமே நினக்கு இருப்பிடமாகக் கருதி இருந்தாயோவென்று என்னைத் தேடிவந்தாயாகக் கூறி அவ்விடத்தினின்று குறியிடமே போ, அப்பொழுது அவன் நோய்தீர்க்கும் மருந்து நீயாகையினாலே 3நின்னுடைய நன்றாகிய அடிமேலேவீழ்ந்து நின்னைஇரந்துகொள்ளும்; 4எ - று.

12இன்னும், (4)கடம்பூண் டொருகானீ வந்தை யுடம்பட்டா
ளென்னாமை யென்(5)மெய் 5தொடு;

எ - து: அதுகேட்ட தலைவி நீ வாராய், இன்னமும் ஒருகால் அவனிடத்தே சென்று உன்குறைமுடித்தலைத் தனக்கு கடனாக அவள் ஏறட்டுக்கொண்டு கூட்டத்திற்கு உடம்பட்டாளென்று அவற்குக் கூறாமைக்கு என் (4) மெய்யைத்தொட்டுச் சூளுறுவாயாகவென்றாள்; எ - று.

6வாவென்றது வந்தையெனத் திரிந்தது.

76 : 15, 112 : 6, 131 : 29 - 30. 143 : 31 - 2. (ஊ) “கரும்பும் வல்லியும் பெருந்தோ ளெழுதி” சிலப். 2 : 29.

1. “தீண்டிலே னாயி னுய்யேன், சீறடி பரவவந்தே னருளெனத்தொழுது சேர்ந்து, நாறிருங் குழலி னாளை.......................புல்லி” சீவக. 2062.

2. “மற்றிந்நோய் தீரு மருந்தருளா யொண்டொடீ” கலி. 60 : 18.

3. (அ) “தூமணிக்கொழுந்து மென்றோட்டுயல்வர வெழுதினாளே” சீவக. 2442. (ஆ) “கழைத்தோட் கேற்பக் கழையெழுதி....................வளையுஞ் செறித்தனரால்” வாயு. பார்ப்பதி திருமண. 17.

4. “புலத்தை” (குறள். 1301.) என்பதற்கு, பரிமேலழகர் புலப்பாயாக வென்று பொருள் கூறி “புலத்தையென்புழி ஐகாரம். ‘கடம்பூண் டொருகானீ வந்தை’ என்புழிப்போல முன்னிலைவினைவிகுதி” என்று எழுதியிருத்தலும் இங்கே அறிதற்பாலது.

5. “மெய்தொடுகு” கலி. 95. 24. “அடிதொட்டேன்” (கலி. 94 : 36) என்பதன் குறிப்பும் பார்க்க.

(பிரதிபேதம்)1இருந்தாயே. 2அதுகேட்டதலைவி அதற்குமறுமொழிகொடாது உடம்பாடுடைமைகுறிப்பான் உணர்ந்தமையிற் பின்னும்தோழி பூங்குழை, 3நின்னுடையவடிமேலே, 4என்றாள் இன்னும், 5தொடு இஃதோவடங்கக்கேள் எ - து, 6வந்தை வாவென்றது திரிந்தது நின்னொடு. வந்தை வாராயென்றது திரிந்து நின்றது நின்னொடு.